Daily Tamil Current Affairs 18th June 2017 for TNPSC Group 2A VAO
தேசிய செய்திகள் :
* விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியில் ஆளும் பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 7 அம்ச திட்டத்தை
தீட்டியிருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்
ஜாவடேகர் தெரிவித்துள்ளார். நீர்ப்பாசன வசதியை மேம்படுத்துதல்,
விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்குதல், அறுவடை கால நஷ்டத்தை தடுத்தல்
ஆகியவை 7 அம்ச திட்டங்களில் முக்கியமானவை ஆகும்.
* தென்னாப்ரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காந்தியடிகள்
கடந்த 1915 மே 25-ம் தேதி அகமதாபாத்தின் கேர்சரப் பகுதியில் தனது முதல்
ஆசிரமத்தைத் தொடங்கினார். பின்னர் 1917 ஜூன் 17ம் தேதி அந்த ஆசிரமத்தை
அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றங்கரைக்கு மாற்றினார். இந்த ஆசிரமத்தில் 1917
முதல் 1930 வரை காந்தியும் அவரது மனைவி கஸ்தூர்பாவும் வசித்தனர். வரலாற்று
சிறப்பு மிக்க இந்த ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
* பெங்களுருவில் நாகச்சந்திரா – எலச்சனஹள்ளி இடையேயான “பசுமை பாதை”
மெட்ரோ ரயில் சேவையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று மாலை
தொடங்கி வைத்தார். ரூ 14 ஆயிரத்து 405 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2006ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
பெங்களுரு மாநகரின் 4 திசைகளையும் இணைக்கும் வகையில் இந்த திட்டம்
வகுக்கக்கப்பட்டது.
* கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் தேர்வு மோசடிகளை
தடுத்து நிறுத்த வேண்டும். தேர்வு மோசடிகள் என்பவை கல்வி அமைப்பை
உருக்குலைய வைக்கும் புற்றுநோய்க்கு சமமானவை என உத்தரப் பிரதேச ஆளுநர் ராம்
நாயக் தெரிவித்துள்ளார்.
* ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்த மாட்டோம் என ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
* பெங்களுரு கிழக்கு –மேற்கு பகுதிகளை இணைக்கும் பையப்பனஹள்ளி
–நாயண்டஹள்ளி (18.10 கிமீ) வரையிலான பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு ‘ஊதா
பாதை’ மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
* நாடு முழுவதும் 50 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதிக்கு தலா ஒரு
பாஸ்போர்ட் சேவை மையத்தை திறப்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பன்னாட்டு செய்திகள் :
* கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கும்
மேலாக நீடித்த பனிப்போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக முந்தைய அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ அரசுடன் 2015ல் பல்வேறு
ஒப்பந்தங்களை செய்து கொண்டார். அவை அனைத்தையும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்
அதிரடியாக ரத்து செய்தார். கியூபா தொடர்பாக புதிய கொள்கை அறிவிக்கப்படும்
என்றும் அவர் அறிவித்தார்.
* ஜப்பானின் யோகோசுகா பகுதியில் அமெரிக்க கடற்படைத் தளத்தில் நிலை
கொண்டிருக்கும் “யு.எஸ்.எஸ. பிட்ஸ்ஜெரால்டு” போர்க் கப்பல் ஜப்பான் கடல்
பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஜப்பானின் நகோயா
நகரில் இருந்து தலைநகர் டோக்கியோவுக்கு பிலிப்பைன்ஸை சேர்ந்த “ஏசிஎக்ஸ்
கிறிஸ்டல்” என்ற சரக்கு கப்பல் மோதியதில் போர்க் கப்பல் கடுமையாக
சேதமடைந்தது. 7 கடற்படை மாலுமிகள் மாயமாகினர்.
* பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான வனாட்டுவின் ஜனாதிபதி
பால்ட்வின் லான்ஸ்டேல் (67) மரணம் அடைந்தார். இவர் கிறிஸ்தவ மதகுரு என்பது
குறிப்பிடத்தக்கது.
* அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் அண்மையில் திருமதி சர்வதேச பூமி
அழகிப் போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவின் 55 வயது சூசி டென்ட் 3வது
இடத்தை பிடித்துள்ளார். இவர் 3 மாதங்களுக்கு முன்பு திருமதி ஆஸ்திரேலிய
பூமி அழகி பட்டத்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
* அமெரிக்க பாராளுமன்ற எம்பிக்களான டானா ரோஹ்பாச்சர் மற்றும் டேட்
போ இருவரும் டிரம்ப் அரசாங்கம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆயுத உதவி
அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர். அந்த ஆயுதங்கள்
பயங்கரவாதிகளின் கைகளுக்கு போய் சேரும் என்பதால் இந்த உதவியை நிறுத்த
வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* சவூதி அரேபியாவில் நீதி விசாரணை முறையில் சீர்திருத்தங்களை
மேற்கொண்டு சவுதி நாட்டு அரசர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று
வெளியிடப்பட்டுள்ள உத்தரவின் படி குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட நீதித்துறை
விவகாரங்களை மேற்பார்வையிடும் உரிமை, பட்டத்து அரசரிடமிருந்து
பறிக்கப்பட்டுள்ளது.
* யேமனில் அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத்
தாக்குதலில் அல்காய்தா பயங்கரவத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக
யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டுச் செய்திகள் :
* லண்டனில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
* இந்தோனேசிய ஓபன் சூப்பர்சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
* தில்லி ரஞ்சி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கே.பி.பாஸ்கருடன்
மோதலில் ஈடுபட்டது தொடர்பாக மூத்த கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீருக்கு
நான்கு உள்ளுர் ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
* 15 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. வரும் 30 ஆம் தேதி தொடங்கும்
இந்தத் தொடரில் 5 ஒரு நாள் ஆட்டங்களும் ஒரு டெஸ்ட் போட்டியும் விளையாடப்பட
உள்ளன.
* லண்டனில் நடைபெற்ற வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி கனடாவை தோற்கடித்தது.
* நார்வே செஸ் போட்டியின் 9வது மற்றும் கடைசிச் சுற்றில்
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் டிரா
செய்தார். ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன்
பட்டம் வென்றார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன், பிரான்ஸின்
மேக்ஸைம் வச்சியர் ஆகியோர் 7வது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
* திவால் குறியீடு சட்டம் தொழில் துறைக்கு உதவியாக இருக்கும் என
“அசோசம்” தமிழகப் பிரிவுத் தலைவர் வினோத் சுரானா தெரிவித்தார். இந்திய
தொழில் – வர்த்தக சபை சார்பில் நொடிந்த நிலை மற்றும் திவால் குறியீடு
(ஐ.பி.சி) -2016 சட்டம் குறித்த தேசிய மாநாடு சென்னையில் நடைபெற்றது.
* இந்தியாவில் தனிநபர் மொபைல் டேட்டா (இணையதளம்) பயன்பாடு 142 சதவீதம் அதிகரித்துள்ளது.
* தூசு மற்றும் தண்ணீர் புகாத 4ஜி ஸ்மார்ட்போனை ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஹெச்.டி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
* டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை
நிறுவனமாக வீல்ஸ் இந்தியா கார் வீல்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் 26 சதவீத
பங்குகளை கையகப்படுத்தும் வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோப்பி
இண்டஸ்ட்ரீஸ், வீல்ஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
* இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவுத் தலைவர் சந்தீப்
தத்லானி ராஜிநாமா செய்துள்ளார். அமெரிக்க பிரிவு தலைவர் மட்டுமல்லாமல்
உற்பத்தி, கன்ஸ்யூமர் பேக்கேஜ், ரீடெய்ல் உள்ளிட்ட சில பிரிவுகளின்
தலைவராகவும் சந்தீப் இருக்கிறார். தலைமைச் செயலாளர் விஷால் சிக்கா
பொறுப்பேற்ற பிறகு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் 9வது முக்கிய நபர்
சந்தீப் ஆவார்.
* இன்னும் ஒரு மாதத்தில் ரூபே கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்ய
என்பிசிஐ திட்டமிட்டிருப்பதாக என்பிசிஐ தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
* சர்வதேச அளவிலான வங்கிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
31.5 கோடி டாலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக நிதித் தகவல்களின் படி தெரிய
வந்துள்ளது.