Daily Tamil Current Affairs 20th June 2017 for TNPSC Group 2A VAO
தேசிய செய்திகள் :
* பிஹார் ஆளுநர் பதவியை ராம்நாத் கோவிந்த் ராஜினாமா செய்தார்.
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்
தனது பதவியை ராஜினாமா செய்தார். பிஹார் மாநில ஆளுநர் பதவி கூடுதல்
பொறுப்பாக மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜூன் 24ம் தேதியுடன் குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைகிறது. ஜூலை 17ம் தேதி குடியரசுத் தலைவர்
தேர்தல் நடைபெற உள்ளது.
* சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜிஎஸ்டி- வரிக்கு நாடு வரும்
ஜூலை 1ம் தேதி முதல் மாறுகிறது. ஜூன் 30ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதனை அறிமுகம் செய்கிறார்.
* மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி 3 நாள்
அரசுமுறை பயணமாக ரஷ்யா புறப்பட்டார். ஜூன் 23ம் தேதி ரஷ்ய வெளியுறவு
அமைச்சர் செர்ஜி ஷோகுயுவுடன் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றிய
இந்தியா –ரஷ்ய இண்டர்நேஷனல் கமிஷனின் 17வது கூட்டத்திலும் கலந்து கொள்ள
உள்ளார்.
* ஜிஎஸ்டி விளம்பர தூதராக பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்
பச்சனை மத்திய உற்பத்தி மற்றும் சுங்கவரி வாரியம் நியமித்துள்ளது. இதற்கு
முன்பு ஜிஎஸ்டி விளம்பர தூதராக பிரபல பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பிவி
சிந்து இருந்தார்.
* சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி எஸ்3 டேப்லட்டை இந்திய
சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எல்டிஈ தொழில்நுட்ப வசதியில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ள இந்த கேலக்ஸி எஸ்3 டேப்லட் விலை ரூ 47990 ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* உ.பிரதேச அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கும் இனி ஆதார்
அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தைத் தவறான முறையில்
பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என அரசு சார்பில் சொல்லப்படுகிறது.
* ஆஸ்திரேலியா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக
ஆன்-லைனில் நுழைவு இசைவு (விசா) பெறும் வசதியை ஆஸ்திரேலிய அரசு அறிமுகம்
செய்யவுள்ளது.
பன்னாட்டு செய்திகள் :
* கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 6 கோடியே 56 லட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
* சிரியாவின் ராக்கா நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையகமாக
கருதப்படுகிறது. சிரியா அதிபர் ஆசாத், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக
போரிட்டு வருகிறார். அதே நேரம் அமெரிக்காவும் அதன் ஆதரவு படைகளும் சிரியாவை
விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறார். இந்நிலையில் சிரியா
விமானப் படையின் போர் விமானத்தை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
* இந்தியர்களுக்கு ஜூலை-1ம் தேதி முதல் ‘ஆன்லைன் விசிட்டர் விசா’
வசதி வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதனால் இந்தியர்களின்
ஆஸ்திரேலிய பயணம் எளிதாகும் என நம்பப்படுகிறது. 2017-ம் ஆண்டில் முதல் 4
மாதங்களில் மட்டும் இந்தியர்களுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசிட்டர்
விசாக்களை ஆஸ்திரேலிய குடியேற்றம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை
வழங்கியுள்ளது.
* வடகொரியாவை உளவு பார்த்ததாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு பின்
உடல்நிலை மோசமடைந்ததால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர்
மரணமடைந்தார்.
* அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமும், இந்தியாவின்
டாடா நிறுவனமும் எஃப்-16 ரக போர் விமானங்களை இனி இந்தியாவில் தயாரிக்க வகை
செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில்
திங்கள் கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.
* அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றான ‘டீப் ரூட்’
என்னும் நிறுவனத்தின் கணிப்பொறிகளில் நிகழ்ந்த தரவேற்ற சோதனையில் உண்டான
தவறின் காரணமாக ஏறத்தாழ 20 கோடி வாக்காளர்களின் தகவல்கள் இணையத்தில்
கசிந்தன.
* சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சீனப் பெருஞ்சுவர் மீது ஜூன்
20ல் யோகாசன பயிற்சி ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய மற்றும்
சீன ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். சீனப்பெருஞ்சுவர் மீது இந்திய மற்றும் சீன
யோகாசன ஆர்வலர்கள் கூட்டாக யோகப் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.
இது ஒரு கலாசார மைல்கல் என இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
* சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிட
தற்போதைய நீதிபதி தல்வீர் பண்டாரியை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது.
ஐ.நாவின் அங்கமான சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில்
அமைந்துள்ளது. இந்த அமைப்பில் 9 ஆண்டு பதவிக்காலத்தைக் கொண்ட 15 நீதிபதிகள்
இடம் பெற்றுள்ளனர். இந்த நீதிபதிகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும்,
பொதுச்சபையும் தனித்தனியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கின்றன.
விளையாட்டுச் செய்திகள் :
* சீனாவில் நடைபெற்று வரும் ‘பிரிக்ஸ்’ ஊஷ_ விளையாட்டுப்
போட்டியில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி 2 தங்கம் உள்பட மொத்தம் 6
பதக்கங்களை வென்றது.
* இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
* ஐபிஎல் போல தென்னாப்ரிக்காவிலும் டி20, குளோபல் லீக் என்றொரு
டி20 லீக் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான அணிகளின் ஏலம் நேற்று
நடைபெற்றது. இதில் டெல்லி ஐபிஎல் அணி உரிமையாளரான ஜி.எம்.ஆர் குழுமம்,
ஜோகன்னஸ்பர்க் அணியை வாங்கியது. கொல்கத்தா ஐபிஎல் அணி உரிமையாளரான
ஷாருக்கான் கேப் டவுன் அணியை ஏலத்தில் தேர்ந்தெடுத்தார்.
* சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து 12 பேர் கொண்ட
சாம்பியன்ஸ் கோப்பை கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்து
அறிவித்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் சர்ப்ராஸ்
அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
* இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் பயிற்சியாளராக
உள்ள ராகுல் டிராவிட்டுக்குப் பதவி நீட்டிப்பு வழங்க பிசிசிஐ
முடிவெடுத்துள்ளது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
* ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ
இந்தியாவில் கூடுதலாக ரூ.130 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஏற்ப இதுவரை ரூ 520
கோடியை நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
* சென்ற மே மாதத்தில் உள்நாட்டில் டாப் 10 பயணிகள் கார்
விற்பனையில் மாருதி சுஸ_கி நிறுவனத்தின் 7 மாடல்கள் இடம் பெற்றுள்ளன. சென்ற
மே மாதத்தில் விற்பனையான முதல் 10 பிராண்டுகளில் மாருதி சுஸ_கியின் ஆல்டோ
மாடல் முதலிடத்தை பிடித்துள்ளது.
* சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி எஸ்3 டேப்லட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
* இந்தியாவில் குறைந்த விலையுடைய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக மோட்டரோலா தெரிவித்துள்ளது.
* வரி பாக்கி தொடர்பாக வருமானவரி துறையின் நடவடிக்கையை எதிர்த்து
பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தாக்கல் செய்த மனு சர்வதேச
நடுவர் தீர்ப்பாயத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.