Daily Tamil Current Affairs 17th June 2017 for TNPSC Group 2A VAO
தேசிய செய்திகள் :
* கேரளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவையை கொச்சியில் இன்று பிரதமர்
மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.5181 கோடி மதிப்பில், 13 கிமீ தூரத்துக்கான
இந்த மெட்ரோ ரயில் சேவை நாட்டின் 8-வது மெட்ரோ ரயில் சேவை என்ற பெருமையை
பெறுகிறது.
* ஜூலை 17ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று
டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
* பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76 காசுகளும், டீசல் விலை
லிட்டருக்கு ரூ 57.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்ட விலை மாற்றம் இன்று
காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
* இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஆம் ஆண்டில் கொண்டு
வந்த அவசரநிலைச் சட்டத்தின் கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
வகையில் வரும் ஜூன் 25, 26ல் அவசர நிலை எதிர்ப்பு தினத்தை அனுசரிக்க மத்திய
அரசு முடிவு செய்துள்ளது.
* பொதுத் துறை வங்கிகளில் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக நடைபெறும்
கடன் ஏய்ப்பு சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கத்
தேவையில்லை என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
* பிரதமர் நரேந்திர மோடி வரும் 24ம் தேதி முதல் போர்ச்சுக்கல், நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் சுற்றப்பயணம் செய்யவுள்ளார்.
* நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள சரக்கு
மற்றும் சேவை வரியால் (ஜிஎஸ்டி) சமையல் எரிவாயு உருளை, மண்ணெண்ணெய்,
இன்சுலின் மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலை கணிசமாக குறையும் என
மத்திய அரசு தெரிவித்துள்ளது.
* வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் ஆகிறது. ரூ 50
ஆயிரத்துக்கும் மேலான பரிவர்த்தனை செய்யும் போது ஆதார் எண்ணை கட்டாயம்
குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
* இந்தியா –தென்கொரியா இடையேயான இரு தரப்பு வர்த்தக உறவுகளை
வலுப்படுத்துவதற்கு, கூட்டுக்குழுக் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என
மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.
பன்னாட்டு செய்திகள் :
* ஐ.எஸ் அமைப்பில் ஆட்களை இணைத்த இந்தியாவைச் சேர்ந்த முகமத் ஷாபி
அர்மர் என்ற இளைஞரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் அமெரிக்கா
சேர்த்துள்ளது. முகமத் ஷாபி அர்மர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச்
சேர்ந்தவர்.
* பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சொத்து மதிப்பு ரூ 105
கோடியாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பணக்கார அரசியல் தலைவர்களின் சொத்து
மதிப்பு விவரங்களை பாகிஸ்தான் நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
* உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை
ஒருங்கிணைப்பதற்காக புதிய அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள்
பொதுச்சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
* ஐ.நா சபையினுடைய பொருளாதார – சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா
மீண்டும் தேர்வாகியுள்ளது. அந்தக் கவுன்சிலில் மொத்தம் 54 நாடுகள்
உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 18 உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று
ஆண்டுகளுக்கு ஒரு முறை நிறைவடைகிறது.
* அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷிய
தலையீடு தொடர்பான விசாரணையை எதிர்கொள்வதற்கு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்,
தனக்கென்று தனிப்பட்ட முறையில் ஒரு வக்கீலை அமர்த்தி உள்ளார்.
* நிதி பரிமாற்றம் தொடர்பான தகவல்களை தானாகவே அளிக்க வகை செய்யும்
ஒப்பந்தத்தை ஸ்விஸ் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட
40 நாடுகளுடன் இது தொடர்பான ஒப்பந்தத்தை ஸ்விஸ் ஏற்றுக்கொண்டாலும்
கொடுக்கப்படும் தகவல்கள் பத்திரமாகவும், ரகசியமாகவும் வைக்கப்பட வேண்டும்
என கூறப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள் :
* வங்கதேசத்துக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
* சர்வதேச அளவில் தற்போது விளையாடி வரும் கால்பந்து வீரர்களில்
அதிக ஸ்டிரைக் ரேட் கொண்டவர் என்ற பெருமை இந்தியாவின் சுநீல் சேத்ரிக்கு
கிடைத்துள்ளது.
* வங்கதேசத்துக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
* சௌதர்ன் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் மகேஷ் மங்கோன்கர் தோல்வி கண்டார்.
* லண்டனில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப்
போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கனடாவை இந்தியா எதிர்கொள்கிறது.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவராக என்.ராமச் சந்திரன் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
* ஆர்ஜென்டீனா டென்னிஸ் வீரர் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ,
குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தப் போட்டி வரும் 25ம் தேதி தொடங்குகிறது.
* இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில்
இந்தியாவின் எச்.சஸ்.பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் அரையிறுதிக்கு
முன்னேறியுள்ளனர்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
* இந்திய நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி சென்ற நிதியாண்டில் 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.
* இந்திய டிஜிட்டல் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலர் என்கிற இலக்கை
எட்ட ஐடி துறை உதவும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
* அமெரிக்க அரசி;ன் கொள்கைகளால் டிசிஎஸ் நிறுவனத்தின்
செயல்பாடுகளில் பாதிப்பில்லை என்று அந்த நிறுவனத்தின் தலைவர்
என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
* வங்கியின் வாராக் கடன் விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக உயர்
அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 19ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
* டாடா டெக்னாலஜி நிறுவனத்தில் சர்வதேச பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ் 36 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறது.
* ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச்
செயலதிகாரி பவன் முன்ஜாலின் கடந்த நிதியாண்டு சம்பளம் ரூ 59.66 கோடி.
முந்தைய 2015-16ம் நிதியாண்டை விட 3.94 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
* ரூபே கடன் அட்டையை ஒரு மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய பேமன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.