Tamil Current Affairs 22nd Nov 2018
இந்திய நிகழ்வுகள்
1) இந்தியாவின் யானைகளுக்கான முதல் பல்நோக்கு மருத்துவமனை உத்திரப் பிரதேசத்தில் மதுராவில் உள்ள சுர்முரா கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது வைல்ட்லைப்Sos (wildlife Sos) என்ற நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே 2010ம் ஆண்டில் முதல் யானை பாதுகாப்பு மற்றும் நலமையத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2) மத்திய மற்றும் மாநில புள்ளியியல் அமைப்புகளின் 26வது மாநாடு, இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த மாநாடானது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வருட மாநாட்டின் கருத்துருவானது “அலுவல் பூர்வமான புள்ளியியல் தரவுகளின் தர நிர்ணயம்” என்பதாகும்.
3) கோவா கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க் கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தம், இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தம், இந்திய ராணுவ பொதுத்துறை நிறுவனமான கோவா சிப்யார்ட் லிமிடெட், ரஷ்ய அரசின் இராணுவ மேஜர் ரோசோ போர்ன் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.
உலக நிகழ்வுகள்
1) எரித்ரியா மீது சுமத்தப்பட்ட பல்வேறு தடைகளை விலக்கிக் கொள்வதற்கு ஒன்பது வருடங்களுக்குப் பிறகு 2018–ல், ஐ.நா. பாதுகாப்பு குழுவானது(UNSC – United Nations Security Council) ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு குழுவானது (UNSC), எரித்ரியா மீது ஆயுதத்தடை, பயணத்தடை, சொத்து முடக்கம் ஆகியவற்றை விதித்திருந்தது.
குறிப்பு:
எரித்ரியாவானது மேற்கில் சூடான் தெற்கில் எத்தியோப்பியா மற்றும் தென்கிழக்கில் டிஜிபுட்டி ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட ஆப்பிரிக்க நாடாகும்.
2) உள்நாட்டு மக்களுக்கான தொழில்சார் பயிற்சிகள், கல்விமுறை மற்றும் மொழிதிறன் வளர்ப்பு போன்றவற்றில் அவர்களின் திறமைகளை வளர்க்க ஒரு நாடு எந்த அளவில் முதலீடு செய்திருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு, சுவிட்சர்லாந்தின் ஐ.எம்.டி பிசினஸ் ஸ்கூல் நடத்திய “உலக திறமையான நாடுகள் – 2018” உலகளாவிய ஆய்வில் இந்தியாவானது மொத்தம் 63 நாடுகளில் 53வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆய்வில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. 2017ம் ஆண்டில் இந்தியா 51வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு நிகழ்வுகள்
அமைதி மற்றும் வளர்ச்சிக்கான “இந்திரா காந்தி விருது” (2018 Indira Gandhi Prize) டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான “CSE”–க்கு (அறிவியல் – சுற்றுச்சூழல் மையம்) வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் நிலையான பங்களிப்பை, செய்துவருவதற்காகவும், இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களில் அந்த அமைப்பு வழங்கியுள்ள பங்களிப்பிற்காக சிஎஸ்இ (CSE – Center For Science and Environment) அமைப்புக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
2016ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு ஆதரவளித்த இளையோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டீபன் பார்க்லே, பிரெக்ஸிட் (BREXIT) அமைப்பின் புதிய செயலாளராக பிரிட்டன் பிரதமர் தெரசா மேவால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான தெரசா மேவின் வரைவு அறிக்கை தொடர்பாக பதவி விலகிய டொமினிக் ராப் என்பவருக்குப் பதிலாக ஸ்டீபன் பார்க்லே பதவியேற்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
குவாமி ஏக்தா வாரம் (தேசிய ஒருமைப்பாட்டு வாரம்) – நவம்பர் 19 முதல் 25 வரை.
தேசிய ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்க உணர்வையும் பலப்படுத்தி ஊக்குவிக்க ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் நவம்பர் 25 வரை தேசிய ஒருமைப்பாட்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குவாமி ஏக்தா வாரத்துடன் ஒன்றிணைந்துப் போகும் வகையில் மத நல்லிணக்கப் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மத நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு நடத்துகிறது.
குறிப்பு:
தேசிய ஒருமைப்பாட்டு தினம் – நவம்பர் 19.
தேசிய மத நல்லிணக்க கொடிநாள் – நவம்பர் 25.