TNPSC Tamil Current Affairs: 21st November 2018
இந்திய நிகழ்வுகள்
1) இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு, நிதி ஆயோக்கானது இமயமலைப் பகுதி பிராந்திய ஆணையத்தை உருவாக்கியுள்ளது(HSRC – Himalayan State Regional Council). இந்த ஆணையமானது நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் வி.கே. சரஸ்வத் தலைமையில் செயல்பட உள்ளது.
மேலும் ஜம்மு காஷ்மீர், உத்திரகாண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களை உள்ளடக்கிய இமயமலைப் பகுதியின் நீடித்த வளர்ச்சிக்கான செயல்பாட்டு ஆணையமாக இந்த ஆணையம் செயல்படும்.
2) இந்தியாவில் சமூகப்பணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி பற்றிய விவகாரங்களை கலந்துரையாடுவதற்காக சமூக அளவில் சகோதரத்துவத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட, இந்திய சமூகப் பணி மாநாடு-இன் (Indian Social Work Congress) ஆறாவது பதிப்பு புது டெல்லியில் நடைபெற்றது.
2018 –ஆம் ஆண்டு மாநாட்டின் கருத்துரு “மனித மேம்பாடு மற்றும் சமூக உள்ளடக்கம் சமூகப் பணிக்கான கல்வி மற்றும் நடைமுறைக்கு தவிர்க்க இயலாதவை” என்பதாகும்.
இந்த மாநாடு முதன்முதலில் 2013-ல் நடத்தப்பட்டது.
3) ஆந்திர பிரதேச மாநிலத்தில், நிலம் தொடர்பான ஆவணங்களை மக்கள் பார்க்கும் வகையில், ‘புதார்’ என்ற இணையதளத்தை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது. மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணைப் போன்று, ஆந்திராவில், நில ஆவணங்களுக்கு “புதார்” என்ற 11 இலக்க அடையாள எண் அளிக்கப்படுகிறது.
இந்த எண்ணைப் பயன்படுத்தி மக்கள், தங்கள் நிலம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை புதார் என்ற அரசு இணையதளத்தில் பார்க்கும் உறுதியை ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
4) மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் பைத்தான் தாலூகாவில் உள்ள வாஹிகாவொன் மற்றும் தனகாவொன் கிராமங்களில் 2-வது மெகா உணவுப் பூங்காவை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ஹர் சிம் ரத் கவுர் பாதல் தொடங்கி வைத்துள்ளார்.
உலக நிகழ்வுகள்
ஆப்பிரிக்க கண்டத்தின் முதலாவது மற்றும் மொராக்கோவின் முதல் அதிவேக இரயில் பாதையானது டேன்ஜியரில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் மொராக்காவின் மன்னர் ஆறாம் முகம்மது ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்த இரயில்பாதைக்கு “அல் போராக்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரஞ்ச் மொழியில் LGV என அறியப்படும். இந்த இரயில் பாதையானது டேன்ஜியர் மற்றும் கஸா பிளான்கா ஆகிய இரு நகரங்களின் பொருளாதார மையங்களை இணைக்கிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
2018 ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் நாட்டின் நசோமி ஒஹீரா “(Nozomi okuhara), ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தென்கொரியா நாட்டின் “சன் வான் ஹோ” (Son wan – ho) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
நியமனங்கள்
நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது அஐய் பூஷன் பாண்டேவை வருவாய் துறையின் புதிய செயலாளராக நியமித்துள்ளது. இவர் நவம்பர் 30-ம்தேதி முதல் பணி ஓய்வு பெறும் ஹஸ்முக் அதியாவுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார்.
தற்போது, அஐய் பூஷன் பாண்டே – UIDAI ன் CEO – ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முக்கிய தினங்கள்
உலகளாவிய குழந்தைகள் தினம் – நவம்பர் 20 சர்வதேச ஒற்றுமை, சிறுவர் நலன் மேம்பாடு ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று உலகளாவிய குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினமானது ஐக்கிய நாடுகள் அவையால் 1954 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
2018 உலகளாவிய குழந்தைகள் தின மையக் கருத்து:“குழந்தைகள் உலகை எடுத்துக்கொண்டு அதை நீலமாக்குகிறார்கள்” (Children are taking over and turning the world blue).