20th November 2018 TNPSC Current Affairs
தமிழக நிகழ்வுகள்
இந்தியாவில் முதலாவதாக செவிலியர் பட்டயப் பயிற்சியில் சேரும் மூன்றாம் பாலினத்தவராக, தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த திருநங்கையான S. தமிழ்ச்செல்வி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். இந்த முடிவானது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் D. ஜெயச்சந்திரனின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
தொழில்துறை பங்குதாரர்கள் ஒன்றிணையவும், திரைப்படம், இசை, விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் துறைகளில் புதிய அணுகுமுறைகளில் விவாதிக்கவும் ஒரு மேடையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, உலகளாவிய டிஜிட்டல் பொருளடக்க சந்தை Global Digital Content Market – GDCM) மாநாடு – 2018 ஆனது புதுடெல்லியில் நடைபெற்றது. இம்மாநாடு, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையால் (DIPP – Department of Industrial Policy and Promotion) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக நிகழ்வுகள்
சீனாவின் இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், இயற்கை சூரியனை விட அதிக வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இச்செயற்கை சூரியனானது 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு நிகழ்வுகள்
மியான்மரின் யாங்கோனில் நடைபெற்ற மேசைப் பந்தாட்டத்தின் IBSF சாம்பியன்ஷிப் போட்டியில் 150 – UP பிரிவில் இந்திய வீரரான பங்கஜ் அத்வானி மியான்மரின் “த்வே ஓவைத்” என்பவரை தோற்கடித்து, 2018ம் ஆண்டிற்கான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
இது 150 – UP என்ற பிரிவில் IBSF-ன் (International Billiards and Snooker Federation) மேசை பந்தாட்டத்தின் மூன்றாவது வெற்றியாகும்.
அறிவியல் & தொழில்நுட்பம்
அரசு பத்திரங்கள் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் “என்எஸ்இ கோ பிட்” என்ற புதிய மொபைல் செயலியையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது.
இதனை, செபி (SEBI) தலைவர் அஜய் தியாகி தொடங்கி வைத்துள்ளார். தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகம் செய்யும் உறுப்பினர்கள் ஆகியோர் இத்தளத்தை எளிதாக அணுக முடியும்.
விருதுகள்
2017ம் ஆண்டின் இந்திரா காந்தி அமைதிக்கான விருது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதானது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1986-இல் உருவாக்கப்பட்டது. இவ்விருது ஆண்டுதோறும் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19ம் தேதி அன்று வழங்கப்பட்டு வருகிறது.
நியமனங்கள்
பீகார் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக “அமரேஷ்வர் பிரதாப் சாஹி” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவிப் பிரமானம் செய்து வைத்துள்ளார். குறிப்பு:
உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளை Article – 217-ன் படி குடியரசுத் தலைவர் நியமிக்கப்படுகிறது.
முக்கிய தினங்கள்
உலக கழிவறை தினம் – நவம்பர் 19 (World Toilet Day)
உலகளவில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கழிவறைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள் உலக கழிவறை கழகம் (world Toilet Organisation) ஏற்படுத்தப்பட்டதன் நினைவாக “உலக கழிவறை தினம்” கடைபிடிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டின் உலக கழிவறை தின கருத்துரு (Theme) “இயற்கை அழைக்கும் போது” (When Nature Calls).