Tamil Current Affairs 19th November 2018
தமிழக நிகழ்வுகள்
தமிழ்நாடு அரசு, விரைவில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த உள்ளது. இது தொடர்பாக மாநில அரசானது அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன் சோதனைத் திட்டமானது போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு பள்ளி ஆகியவற்றில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
1) 2019 ஆம் ஆண்டின் இந்தியக் குடியரசு தினவிழா அணி வகுப்பில் “தலைமை விருந்தினராக (Chief Guest at the 2019 Republic Day Parade of India) தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபர் “சிரில் ராமபோசர்” பங்கேற்க உள்ளார்.
2) தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து இந்திய குடியரசு தினவிழா அணி வகுப்பில் பங்கேற்கும் இரண்டாவது தலைவர் “சிரில் ராமபோசா” ஆவார். இதற்கு முன்னர், முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர் “நெல்சன் மண்டேலா” 1995 ஆம் ஆண்டு அணி வகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
3) புற்றுநோய் ஆராய்ச்சியில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்ந்து ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து (UK) நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
4) இந்த ஐந்தாண்டு முன்முயற்சிக்கு, இந்தியாவின் பயோடெக்னாலஜி துறை (DBT) மற்றும் இங்கிலாந்தின் கேன்சர் ரிசர்ச் இங்கிலாந்து (CRUK) ஆகியவை இணைந்து செயலாற்ற உள்ளன.
5) இளைஞர்களை கூட்டுறவு வணிக முயற்சிகளுக்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC – National Cooperative Development Corporation) “யுவ சஹாகர்” (Yuva Sahakar) என்ற கூட்டுறவு தொழில் நிறுவன ஆதரவு மற்றும் புத்;தாக்கத் திட்டத்தினை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த திட்டங்களுக்கான செலவினங்களில், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவுகளில் உள்ளோருக்கு 80% நிதியும் மற்றவர்களுக்கு 70% நிதியும் அளிக்கப்படும்.
உலக நிகழ்வுகள்
இந்தியா – சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் பங்கேற்கும், 21-வது சுற்றுப் பேச்சுவார்த்தை வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சீனாவின் துஜங்யான் நகரில் நடைபெற உள்ளது. இப்பேச்சு வார்த்தையில் இந்தியாவின் சார்பில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்க உள்ளார்.
அறிவியல் & தொழில்நுட்பம்
கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், டிஜிட்டல் மயமாக்கும் முதன்மை முயற்சியாக, ஆசிரியர் பயிற்சியை இணையம் மூலம் பெறும் வகையில் “கூல்” என பெயரிடப்பட்டு உள்ள, திறந்த நிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான திட்டங்களை, கைட் எனப்படும், கேரள கல்வியியல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
நியமனங்கள்
1) மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் 24-வது தலைமை நீதிபதியாக “நீதிபதி சஞ்சய் குமார் சேத்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தின் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2) மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் முதன்மை இருக்கை “ஜபல்பூர்” நகரில் உள்ளது. ஜபல்பூர் உயர்நீதிமன்றம் நவம்பர் 1, 1956ல் நிறுவப்பட்டது.
விருதுகள்
2018 ஆம் ஆண்டிற்கான “வாழ்நாள் சாதனையாளர் விருது” டாக்டர் மார்த்தா ஃபரெல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண் சமத்துவம், பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு ஆகியவற்றிற்காக தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக மறைந்த “டாக்டர். மார்த்தா ஃபரெல்” அவர்களுக்கு, புது டெல்லியில் நடைபெற்ற 6-வது இந்திய சமூகப்பணி மாநாட்டில் “வாழ்நாள் சாதனையாளர் விருது – 2018” வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
சாலை போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தினம் நவம்பர் 18 (World Day of Remembrance for Road Traffic Victims): சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் நவம்பர் 18 அன்று சாலை போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2018 சாலைப் போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தின முழக்கம் (WDOR 2018 Slogan):
“சாலைகளின் கதைகள்” (Roads have Stories)