Tamil Current Affairs 31st May 2017 TNPSC VAO Group 2A
தேசிய செய்திகள் :
1) இஸ்ரோ 3136கிலோ எடை கொண்ட ஜிசாட்-19 என்ற செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மார்க்3 டி1 ராக்கெட் மூலம் ஜூன் 5ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. மேலும் இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது.
2) இந்திய ராணுவம் எந்நேரமும் விழிப்புடன் உள்ளது. எதற்கும் தயாராக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3) கேரளாவில் மாவேலிக்கரை, வைக்கம் ஆகிய இடங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
4) இறைச்சிக்காக மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த தடையை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
5) காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வரும் 12 பயங்கரவாதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ரியாஸ் நைகூ (எ) சுபைர், ஜாகிர் ரஷீத் பட் (எ) ஜாகிர் மூஸா ஆகியோர் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
6) நாட்டில் புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
7) நமது ராணுவத்தின் ஆயத்த நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரண் போன்று விளங்குவதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு செய்திகள் :
1) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2) உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவை சமாளிக்கும் வகையில் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
3) ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற சீன அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஜூன் 1ம் தேதி அமல்படுத்தப்பட உள்ள புதிய சட்டத்தின் மூலம் இந்த விதி அமலுக்கு வருகிறது.
4) வெள்ளை மாளிகையில் தகவல்தொடர்பு இயக்குநராக பணிபுரிந்து வந்த மைக் டப்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
5) இந்தியா-ஜெர்மனி இடையே இணையவழிக் கொள்கை, வளர்ச்சி முன்முயற்சிகள், நீடித்த நகர வளர்ச்சி, திறன் மேம்பாடு, ரயில்வே பாதுகாப்பு, தொழிற்பயிற்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
6) பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லினை சென்றடைந்தார்.
7) வங்க கடலில் உருவான மோரா புயல் கோக்ஸ் பஜார்-சிட்டகாங்க் கடற்பகுதியில் கரையை கடந்தது. மேலும் இந்த புயல் வடக்கு நோக்கி நகரும் என வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :
1) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
2) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா வெற்றி பெற்றனர்.
3) உலான்பாத்தர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி மங்கோலியா தலைநகரான உலான்பாத்தரில் வரும் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் தேவேந்திர சிங் உள்ளிட்ட 7 வீரர்களும், மகளிர் பிரிவில் மேரி கோம் உள்ளிட்ட 3 வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.
4) ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசையில் இந்தியா சார்பில் கேப்டன் விராத் கோஹ்லி 3ம் இடம் பிடித்துள்ளார். மேலும் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், ரபாடா ஆகியோர் முதலிடம் வகித்துள்ளனர்.
5) புரோ கபடி லீக் போட்டியில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே சென்னை அணியின் இலக்கு என்று அதன் பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
6) கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை வருமான வரித்துறை அணி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், மகளிர் பிரிவில் சத்தீஸ்கர் மாநில அணி மற்றும் செகந்திராபாத்-தெற்கு மத்திய ரயில்வே அணியும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
7) ஐரோப்பிய கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான தங்கக் காலணி விருதை, பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் லியோன்ஸ் மெஸ்ஸி 4வது முறையாக பெற்றுள்ளார்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) தெற்காசிய நாடுகளை நேரடியாக இணைக்கும் மேகாலயா-மியான்மர் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.
2) ஐ.டி பணியாளர்களுக்கு சங்கம் தேவையில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
3) இந்திய வங்கிகளின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடையாது என்றும் மேலும் 2018 மார்ச் மாதத்திற்குள் இந்திய வங்கிகளின் வாராக்கடன் விகிதம் அதிகரிக்கும் என்றும் தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் அறிக்கை கூறியுள்ளது.
4) பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் சாட்டிலைட் போன் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.
5) மும்பை பங்குச் சந்தையில் கடந்த நான்கு நாட்களாக சென்செக்ஸ் தொடர்ந்து முன்னேறி 31000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
6) இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்ப 13 காசுகள் உயர்ந்து ரூ.64.53 காசுகளாக உள்ளது.
7) ஜவுளி, ஆபரணம், வேளாண் விளை பொருட்கள் உட்பட இந்தியா முத்திரை பதித்த பல்வேறு ஏற்றுமதி பொருட்களில் தனக்குரிய இடத்தை இந்தியா நழுவ விட்டது.