Tamil Current Affairs 30th May 2017 TNPSC VAO Group 2A
தேசிய செய்திகள் :
1) கத்தரி வெயிலுக்குப் பிறகும் தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது.
2) பாகிஸ்தானுடனான இரு தரப்பு கிரிக்கெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறினார்.
3) திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வருடம் முதல், சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகை என்கிற புதிய பிரிவு இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது சர்வதேச அளவில் புகழ் பெற்ற பல திரைப்படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டது.
4) மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது என ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டின் படி இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது எனவும், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் செயல்பாடுகள் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
5) கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்து முதற்கட்டமாக இன்று 120 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
6) கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் ராகிங்கை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ராகிங்கில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கைக்கு வழிசெய்யும் புதிய செல்போன் செயலியை பல்கலைக் கழக மானியக்குழு அறிமுகப்படுத்தி உள்ளது.
பன்னாட்டு செய்திகள் :
1) ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற சீன அரசு தடை விதித்துள்ளது. சைபர் சட்டங்களில் பெரும் மாற்றங்களை சீன அரசு கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. இந்த மாற்றங்கள் உள்ளடக்கிய திருத்தப்பட்ட சைபர் பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
2) ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் முதல் கட்டமாக மே 29, ஜெர்மனி தலைநகர் பெர்லினை சென்றடைந்தார்.
3) ஐ.நா தடைகளை மீறி வடகொரியா புதிய ஏவுகணை சோதனையில் நேற்று ஈடுபட்டது. சுமார் 450 கிமீ தூரம் பறந்த அந்த ஏவுகணை ஜப்பான் கடல்சார் பொருளாதார எல்லைப் பகுதிக்குள் விழுந்ததால் பதற்ற நிலை அதிகரித்துள்ளது. கடந்த 3 வார கால அளவில் அந்நாடு மேற்கொள்ளும் மூன்றாவது ஏவகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
4) இந்தோனேசியாவில் பலுவின் தென்மேற்குப் பகுதியான சுலவேசி தீவில் 80 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவானது.
5) மான்செஸ்டர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிரிட்டனில் 23 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பிரிட்டன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
6) வங்க கடலில் உருவான மோரா புயல் 117 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் வங்கதேச கடற்கரையை தாக்கியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :
1) செக் குடியரசில் கடந்த 4 நாள்களாக நடைபெற்ற ஜூனியர்களுக்கான சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் உள்பட 11 பதக்கம் கிடைத்துள்ளது.
2) இந்திய தடகள வீரர் வீராங்கனைகளுக்காக உலகின் சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் வலியுறுத்தினார்.
3) கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் ஐ.ஓ.பி, வருமான வரித்துறை அணிகள் வெற்றி பெற்றன.
4) ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் சர்வதேச வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
5) பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் வெற்றி பெற்றனர்.
6) சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் சீனாவை வீழ்த்தி தென்கொரியா சாம்பியன் பட்டம் வென்றது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அடுத்த 2 ஆண்டுகளில் அனைவருக்கும் சாட்டிலைட் போன் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவை அடுத்த 18 முதல் 24 மாதங்களில் படிப்படியாக செயல்படுத்தப் படும் என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் வாஸ்தவா தெரிவித்துள்ளார்.
2) ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு 9 மாதங்களில் கூடுதல் வரி மூலம் ரூ 55000 கோடி வருவாய் ஈட்ட முடிவும் என மத்திய அரசு கணித்துள்ளது.
3) நடப்பாண்டில் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக ரூ 80 கோடி முதலீடு செய்ய இருப்பதாக வீல்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
4) லார்சன் ரூ டூப்ரோ நிறுவனம் சென்ற நிதியாண்டில் ரூ 6041 கோடி லாபம் ஈட்டியது.
5) சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 13மூ உயர்ந்து ரூ 503 கோடியாக உள்ளது என வங்கியின் நிhவ்hக இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான என்.காமகோடி கூறினார்.
6) நடப்பாண்டில் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக ரூ80 கோடி முதலீடு செய்ய இருப்பதாக வீல்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.