Tamil Current Affairs 27th May 2017 TNPSC VAO Group 2A
தேசிய செய்திகள் :
1) ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக நிலையான ஆதரவு அளிப்போம் என மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நத் தெரிவித்துள்ளார்.
2) ஜம்மு காஷ்மீரில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
3) அசாம்-அருணாசல பிரதேச மாநிலங்களை இணைத்து கட்டப்பட்டு உள்ள நாட்டிலேயே மிகவும் நீளமான ஆற்றுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
4) அசாமில் மாயமான போர் விமானத்தின் சிதைந்த பாகங்கள் தேஜ்பூர் நகரில் இருந்து வடமேற்கு பகுதியில் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
5) ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 166 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாநிலம் முழுவதும் சாலைகள் மேம்பாடு, பாலம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
6) பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தகவல் தொடர்பாளர் மற்றும் இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய வழியைக் காட்டியவர் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
7) திருமணங்களைப் பதிவு செய்வதற்கு கணவன் மற்றும் மனைவியின் கடவுச் சீட்டு விவரங்களை சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
பன்னாட்டு செய்திகள் :
1) பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தினால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
2) அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமுல் தாப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது நியமனத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
3) சிலி நாட்டில் அடகாமா பாலைவனத்தில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் பணி துவங்கியது. இத்தொலைநோக்கி அடகாமா பாலைவனத்தின் மத்தியிலுள்ள 3000 மீட்டர் உயரமுள்ள மலையில் அமைக்கப்படுகிறது. மேலும் இது 2024ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று சிலி நாட்டு அதிபர் மிஷேலே பாஷேலெட் கூறியுள்ளார்.
4) அமெரிக்காவில் கிடங்குகளில் புதைக்கப்பட்டுள்ள அணுக்கழிவுகளால் ஆபத்து ஏற்படலாம் என்று அறிவியல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
5) சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளான ஜூபிடர் எனும் வியாழன் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜூனோ என்ற விண்கலத்தை ‘அட்லஸ் வி-551’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. இந்நிலையில் வியாழன் கிரகத்தில் சூறாவளி காற்றும், அமோனியா ஆறும் உள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
6) 2017ம் ஆண்டுக்கான இந்திய-சிங்கப்பூர் கடற்படை கூட்டுப் பயிற்சி புதன் கிழமை நிறைவடைந்தது. இந்தப் பயிற்சியில் ஹெலிகாப்டருடன் கூடிய ஆர்எஸ்எஸ் ஃபர்மிடபிள், ஏவுகணை வீசும் திறன் கொண்ட ஆர்எஸ்எஸ் விக்டரி ஆகிய போர்க்கப்பல்கள் பங்கேற்றன.
விளையாட்டுச் செய்திகள் :
1) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
2) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில நாளை முதல் தொடங்குகிறது. இதில் முதல் சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால் பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேருடன் மோதுகிறார்.
3) 2015ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற 35வது தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 66 வீரர்-வீராங்கனைகள் மற்றும் 42 பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு 4 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 500 ருபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
4) சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவிடம் தோல்வியடைந்தது.
5) 15வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.
6) இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தமிழ்நாடு பிரிமியர் லீக் டி 20 தொடரில் பங்கேற்றுள்ள திருவள்ளுர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7) கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 59ம் ஆண்டு ஆடவருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில் டெல்லி ஏர்போர்ஸ் அணி சுழற்கோப்பையை வென்றது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி சென்னை மாநகரில் 42வது கிளையை மந்தவெளியில் தொடங்கியுள்ளது.
2) ஐடிசி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.2669 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.2380 கோடியாக இருந்தது.
3) இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டது. நிப்டி முதல் முறையாக 9600 புள்ளிகளும், மற்றும் சென்செக்ஸ் முதல் முறையாக 31000 புள்ளிகளையும் கடந்தது.
4) மருந்து துறை நிறுவனமான சன் பார்மாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.1223 கோடியாக உள்ளது.
5) நிறுவனம் தொடங்கி 7 ஆண்டுகளுக்குள் உள்ள நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களை பெறலாம் என்று புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
6) நாட்டிலேயே மிக நீளமான ஆற்றுப் பாலமான சதியா பாலம் கட்டுவதற்கு தேவையான 90 சதவீத ஸ்டீலை பொதுத்துறை நிறுவனமான செயில் வழங்கியுள்ளது.
7) பல்வேறு துறைகளின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி நிறுவனம் கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் ரூ.2669.47 கோடி லாபம் ஈட்டியது.