25th May 2017 Tamil Current Affairs TN Police TNPSC VAO Group IIA
தேசிய செய்திகள் :
1) பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீய சக்திகளை தோற்கடிக்க பிரிட்டன் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
2) டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் சுற்றுலாவாசிகள் தூய்மை பராமரிப்பு பணிகள் குறித்த புகார்களை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் தூய்மை இந்தியா என்கிற செயலியை (ஆப்ஸ்) மத்திய கலாசாரத் துறை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.
3) டெல்லி, கிரேட்டர் நொய்டா, நொய்டா, மீரட், பாக்பத், மைன்புரி மற்றும் லக்னோ உள்ளிட்ட இடங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் வருமானத் துறை சோதனை நடத்தியது.
4) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த மாணவன் மோகன் அப்யாஸ் ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 6 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
5) இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 போர் விமானம் அசாம் மாநிலம் தேஜ்பூரில் இருந்து புறப்பட்டு மாயமானது. இந்நிலையில் விமானத்தை தேடும் பணி இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
6) ஐடிஓ-காஷ்மீர் கேட் இடையிலான மெட்ரோ சேவை பணிகள் முடிக்கப்பட்டு பாதுகாப்பு குறித்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
7) எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் எம்.சி.மிஸ்ராவுக்கு எடின்பரோ ராயல் மருத்துவக் கல்லூரியின் கவுர அறுவை சிகிச்சை பெலோஷிப் விருது அளிக்கப்பட்டுள்ளது.
8) இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சியாச்சின் மலை சிகரத்தையொட்டிய வான்வெளியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி பறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பன்னாட்டு செய்திகள் :
1) இந்தியாவின் வளர்ச்சி உதவியை கணிசமாகக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
2) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 800 கி.மீ தொலைவில் உள்ள மாராவிவில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் 100 பேர் ஊடுருவியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்றுவதற்காக அப்பகுதியில் அதிபர் ரோட்ரிகா ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தி உள்ளார்.
3) ஆசியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
4) வடகொரியா புக்குசோங்-2 என்ற ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்நிலையில் தொடர்ந்து அணு ஆயத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா தனது போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
5) லஷ்கர் இ தொய்பா, தலிபான், ஐஎஸ், அல்காய்தா, ஹக்கானி நெட்வொர்க் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பதற்காக அமெரிக்கா மற்றும 6 வளைகுடா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :
1) சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நாளை கால் இறுதியில் சீனாவுடன் மோதுகிறது.
2) இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருதை சியெட் நிறுவனம் வழங்கியது.
3) நாச்சிமுத்துக் கவுண்டர் கோப்பைக்கான 52வது தேசிய ஆடவர் கூடைப்பந்துப் போட்டி கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நாளை முதல் தொடங்குகிறது.
4) தாய்லாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் யோகாசனப் போட்டியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த யோகா மாணவர்கள் ஆர்.லோகேஷ், டி.பிரவீன்குமார் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
5) அமெரிக்காவில் நடைபெற்ற டபுள்யு.டபுள்யு.இ உலக பொழுது போக்கு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ஜிந்தர் மகால் றுறுநு சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) சீனாவின் பொருளாதார மதிப்பீட்டை மூடிஸ் குறைத்துள்ளது. தற்போது ஏ1 என்ற தர மதிப்பீட்டை சீனாவுக்கு மூடிஸ் வழங்கியுள்ளது.
2) ஜிஎஸ்டி சட்டத்தினால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்கும் என ஹெச்எஸ்பி அறிக்கை கூறியுள்ளது.
3) இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் ரூ.3500 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குவதாக அறிவித்திருக்கிறது.
4) இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் மொத்த வாராக்கடன் 2016-17ம் நிதியாண்டில் 29.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
5) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக பங்குச்சந்தைகள் வெகுவாக சரிந்து வர்த்தகம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 63.61 புள்ளிகள் சரிந்துள்ளது.
6) இந்திய பங்குச் சந்தைகள் சாதனை உச்சத்தை தொட்டுள்ளது. வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 430 புள்ளிகள் உயர்ந்து 307332 புள்ளிகளாக உள்ளது.
7) பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சாட்டிலைன் போட் சேவையை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மமோஜ் சின்ஹா புதுடெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.