24th May 2017 Tamil Current Affairs TN Police TNPSC VAO Group IIA
தேசிய செய்திகள் :
1) பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார்.
2) ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள காவல்துறை முகாம் மீது குண்டு வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர்.
3) ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்க தரிசனம் செய்ய, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டிற்கான யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் யாத்தீரிகர்கள் பாதுகாப்பிற்கு சுமார் 27000 ராணுவ வீரர்களை பயன்படுத்த ஜம்மு காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது.
4) நாடு முழுவதும் சரக்கு மற்றும் வேவை வரியை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
5) காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ உதவி வரும் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
6) 1990ம் ஆண்டுகளில் பெங்களுரு சாலைகளில் ஓடிய இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) பேருந்துகள் மீண்டும் கட்டமைக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் சாலைகளில் இயக்கப்பட உள்ளது.
7) கடந்த ஆண்டில் விசா காலம் முடிந்த பிறகும் 30000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
8) மருத்துவ மேற்படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும் 2017 கல்வியாண்டு முதல் புதிய கட் ஆஃப் முறை கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பன்னாட்டு செய்திகள் :
1) நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் பிரசண்டா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
2) வடகொரியா அடுத்தடுத்து சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் புதிதாக அணுஆயுத சோதனை நடத்தவும் அந்த நாடு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
3) இஸ்ரேல் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது என்றும், அந்நாட்டை அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். அதற்கு தேவை ஏற்பட்டால் எங்கள் நாடு ஏவுகணை சோதனைகளை நடத்தும் என்று ஈரான் அதிபர் கூறினார்.
4) அமெரிக்க அதிபர் சவூதி அரேபியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி நிலவச் செய்வதே எனது குறிக்கோள் என்று தெரிவித்தார்.
5) உரிய ஆவணங்கள் இல்லாமல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்தியர் ஒருவருக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்க அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.
6) வான்னாகிரை இணைய வைரஸையடுத்து, அதைவிட பயங்கரமான “இடர்னல்ராக்ஸ்” என்ற இணைய வைரஸ் கணினிகளைத் தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் இதழான ஃபார்ச்சூன் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :
1) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், மாவட்ட விளையாட்டு ஆணையம் மற்றும் வாடகை சைக்கிள் உரிமையாளர்களின் சார்பில் குழந்தைகள், ஆண்கள், பெண்களுக்கான மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி ஏரிச்சாலையில் நடைபெற்றது. இதில் சிறுமிகளுக்கான போட்டியில் தஞ்சாவூரைச் சேர்ந்த பத்மஜா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
2) சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி இந்தோனேஷியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
3) 5வது புரோ கபடி லீக் போட்டி ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக தமிழக அணி உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.
4) சர்வதேச சதுரங்க போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி 50 போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்றதால் சர்வதேச சதுரங்க ரேட்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
5) தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் 2வது ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் வட்டு எறிதல் போட்டியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அபேய் குப்தா 56.47 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
6) ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஜிது ராய் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
7) கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 59ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை ஐஓபி அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது.
8) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் இந்திய வீரர்களான ராம் குமாhர் ராமநாதன், யூகி பாம்ப்ரி ஆகியோர் தோல்வியடைந்தனர்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையால் பல பொருள்களின் விலை குறையும். குறிப்பாக பேக் சிமென்ட், மருத்துவ கருவிகள், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்டவற்றின் விலை குறையும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
2) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்காவின் சம்பளம் 67 சதவீதம் சரிந்திருக்கிறது.
3) டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.4336.43 கோடியாக உள்ளது.
4) மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 30365 புள்ளிகளாக நிலைத்தது.
5) உள்நாட்டில் சென்ற ஏப்ரல் மாதத்தில் 29.30 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் உற்பத்தியான 29.50 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 0.6மூ குறைவாகும்.
6) இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) மேற்கொண்ட முதலீடுகள் மூலம் அந்நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் ரூ.1.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது.
7) வாடகைக் கார் சேவையில் ஈடுபட்டுள்ள உபேர் இந்தியா நிறுவனம் புதிதாக வடிவமைத்துள்ள செயலியை (ஆப்) 29 நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.