தேசிய செய்திகள்:
1) காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சமீபகாலமாக அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் எல்லையில் நவ்சேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் இருவர் உயிரிழந்தனர்.
2) மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மலேகானில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
3) ஜி.எஸ்.எல்.வி மார்க்3 ராக்கெட்டை அடுத்த மாதம் முதல் வாரம் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
4) பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் தேவையில்லை என மூத்த குடிமக்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
5) ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நௌஷேரா பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
6) காஷ்மீரில் சமீபகாலமாக பாதுகாப்புப் படையினருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஜம்மு – காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பன்னாட்டு செய்திகள் :
1) புத்த மதத்தினரின் மிகப்பெரிய திருவிழாவான வெசாக் தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் இதில் அவர் இந்தியாவின் வளர்ச்சி இலங்கைக்கு பயன் அளிக்கும் என கூறினார்.
2) இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
3) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இணையதள வழி குற்றங்களை தடுக்கும் வகையில் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
4) ஆசியா ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதார நெடுஞ்சாலை துவக்க விழாவில் அமெரிக்கா பங்கேற்காது என்று அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5) கம்போடியாவில் வருடாந்திர விதைப்பு திருவிழா மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. இந்தாண்டு எந்த பயிரை பயிரிட்டால் விளைச்சல் இருக்கும் என்பதை கணிக்க அரசு எருதுகள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டன.
6) இலங்கை மலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் கொழும்பு – வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள் :
1) ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதியில் விளையாட உள்ளுர் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.
2) ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் தேர்வு செய்த கனவு ஐபிஎல் அணியின் கேப்டனாக எம்.எஸ்.டோனி நியமக்கப்பட்டுள்ளார்.
3) தில்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், திவ்யா காக்ரன் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
4) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9 வது அகில ஹாக்கிப் போட்டியில் கபுர்தலா ஆர்.சி.ப், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே, தில்லி ஓ.என்.ஜி.சி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
5) தென் ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனான டுபிளெஸ்ஸி 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
6) மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப், அமஸ்டாஸ்ஜியா செவாஸ்டாவோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
7) இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ஜிகா டன் கார்பன் உமிழ்வை சேமிக்க வேண்டுமென்றால் பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
8) எப்எம்சிஜி துறையின் முக்கியமான நிறுவனமான நெஸ்லேவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 6.8 சதவீதம் உயர்ந்து ரூ.306 கோடியாக இருக்கிறது.
9) இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 37571 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
10) ஸ்நாப்டீல் நிறுவனத்தை பிளிப்கார்ட்டுக்கு விற்க முதலீட்டு நிறுவனமான நெக்ஸஸ் ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
11) சில்லரை விலை பண வீக்கம் கடந்த மாதத்தில் 3 சதவீதத்துக்கு கீழ் சரிந்தது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கான சில்லரை பணவீக்கம் 2.99 சதவீதமாக சரிந்துள்ளது.