12th May 2017 Tamil Current Affairs TN Police TNPSC VAO Group IIA
Content from We Shine Academy, Chennai
தேசிய செய்திகள் :
1) துணை ராணுவத்தினரின் குறைகளைத் தெரிவிக்க செல்லிடப்பேசி செயலியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலியை சுமார் 9 லட்சம் துணை ராணுவப்படை வீரர்களும் பயன்படுத்தி எந்த புகாரையும் அளிக்கலாம்.
2) பிரான்ஸ் நாட்டுக்கான புதிய தூதராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவுப் பணியில் 1988 ஆம் ஆண்டு சேர்ந்த வினய் மோகன், ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவின் கூடுதல் செயலாளராகவும் இருந்துள்ளார்.
3) எஸ்பிஐ சேவை கட்டணங்களை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்கும்போது ரூ. 25 கட்டணம் வசூலிக்கப்படும் ரூபே அட்டை பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். இது ஜீன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
4) கேரளாவின் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ் பயங்கரவாத வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.
5) ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜீலை மாதம் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி பொது வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோபாலகிருஷ்ண காந்தி 2004 முதல் 2009 வரை மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியவர் பல நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றி உள்ளார்.
6) உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் கேதார்நாத் உள்ளிட்ட “சார்தாம் எனப்படும் நான்கு புனித தலங்களுக்கு ரயில்வே பாதை அமைக்கும் தி;ட்டத்தை ரயில்வே துறை தொடங்கியுள்ளது. இதற்கான இறுதி ஆய்வு தொடக்கப்பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா மே 13-ல் நடைபெற உள்ளது.
7) இந்தியாவின் வெளியுறவுத் துறை கொள்கையில் ரஷ்யாவுடனான உறவு முக்கிய தூணாக விளங்குகிறது. ரஷ்யாவில் வரும் ஜீன் மாதம் செயிண்ட பீட்டர்ஸ்பெர்க நகரில் இந்திய ரஷ்யா இடையிலான உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த மாதம் ரஷ்யா செல்கிறார்.
8) பிரதமர் மோடி தலைமையிலான மததிய அரசின் மூன்றாண்டு சாதனைகளை மக்களிடம் விள்க்க வேண்டும் என அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மே 26ம் தேதியுடன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்றாண்டை நிறைவு செய்கிறது.
9) வானில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தரையிலிருநது தாக்கவல்ல |ஸ்பைடர்| ரக ஏவுகனைகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்தது. இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட |ஸ்பைடர்| ரக ஏவுகணையானது வானில் பறக்கும் எதிரிகளின் இலக்குகளை 15 கி.மீ தொலைவு வரை சென்று துல்லியமாக தாக்கும் திறனுடையது. ஒடிஸா மாநிலம் பலாசோரில் இந்த ஏவுகணையை இநதிய ராணுவம் சோதனை செய்தது.
பன்னாட்டு செய்திகள் :
10) கடந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 % மாறாக இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% என சீனாவின் அரச நாளிதழ் குளோடல் டைம்ஸ் புள்ளி விவரம் கூறுகின்றது. மேலும் எர்ன்ஸ்ட் அண்ட யங் சர்வேயின் படி உலகின் முதலீட்டுக் கவர்ச்சி மிகுந்த இடமாக இந்தியாவே உள்ளது.
11) வடகொரியா 6வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த தயாராகி வருவது செயற்கைகோள் புகைபடங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. எனவே வடகொரியவை மிக தீவிரமாக கண்காணிக்க அமெரிக்கா உளவுப் பிரிவான சிஐஏவில் சிறப்பு படை உருவாக்கப்படுள்ளது.
12) இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசிய –பசிபிக் கடல் பகுதி பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பது குறித்து அமெரிக்காவின் ரோட் ஐலாண்ட் மாகாணத்தில் இந்திய அமெரிக்க உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அந்தக்கடல் பகுதி பாதுகாப்பில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
13) கொழும்புவில் சர்வதேச புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், இந்திய நிதிஉதவியுடன் கட்டப்பட்டுள்ள திககோயர் ஆஸ்பத்திரியை திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்து பேசவும் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளார்.
14) சிரியாவின் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முக்கிய நகரமான தாப்காவை அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயக படையினர் மீட்டனர்.
15) ஆப்கானிஸ்தானில் தெற்கு காந்தஹார் பகுதியில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு, வன்முறைகளில் 17 தலீபான் பயங்கரவதிகள் உயிரிழந்தனர்.
16) இந்திய பிரதமர் மோடி இலங்கை சுறறுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சீன நீர்முழ்கிப் க்ப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கு இலங்கை அனுமதி மறுத்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :
1) கர்ஷி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகிபாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
2) தில்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் அனில் குமார் (85 கிலோ கிரேக்கோ – ரோமன் பிரிவு), இந்திய வீராங்கனை ஜோதி (மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
13) வரும் மே 30ம் தேதி தொடங்கவுள்ள தாய்லாந்து ஓபன் கிராண்டர் கோல்டு பாட்மிண்டன் போட்டியிலிருந:த இந்தியாவின் பி.வி.சிந்து விலகியுள்ளார்.
14) ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் 7 ரன்களை வித்தியாசத்தில் மும்பை இண்டியன்களை கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோற்கடித்து 7வது வெற்றியை பெற்றது.
15) மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் மன்னார்குடி வீரர்கள் முதலிடம் பெற்றள்ளனர். இதில் மாநிலம் முழுவதுமிருந்து 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆண்டுக்கான இரும்பு மனிதர் என்ற பட்டம் மன்னார்குடி வீரர் வி.எஸ் யோகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) இசூஸீ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் “எம்யு – எக்ஸ்” என்ற புதிய வகை சொகுசு காரை அறிமுகம் செய்தது. இதன் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.23.99 லட்சம் முதல் ரூ.25.99 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கார்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்படும்.
2) நாட்டின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். நான்காம் காலண்டு நிகர லாபம் 27மூ அதிகரித்துள்ளது.
3) ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாபபீலை ஃப்ளிக்கார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வது தொடர்பாக நெக்லஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் அனுமதியை ஸாப்ட்பேங்க பெற்றுள்ளது.
4) இந்திய அரசு ஸ்திரமான வரிவிதிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும் மேலும் அநாவசிய கெடுபிடிகளை தவிர்ப்பதன் மூலம் அந்நிய முதலீடுகளை இந்தியா அதிகளவில் ஈர்க்க முடியும் என டெல்டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி டாம் ஸ்வீட் தெரிவித்தார்.