TN Police Constable Exam Tamil Current Affairs 22nd February 2017
ஏப்ரல் முதல் மின்னணு குடும்ப அட்டைகள்: தமிழக அரசு அறிவிப்பு·
ஏப்ரல் முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மார்ச் 4 - இல் அரிசி கண்காட்சி
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி ('ஏசி டெக்')நாட்டு நலப்பணித் திட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் உள்நாட்டு அரிசி வகைகள் கண்காட்சி, வரும் மார்ச் 4-இல் உள்ளது.
காற்று மாசினால் இந்தியாவில் மரணங்கள்:
மறுப்பு வழியில் மத்தியஅமைச்சகம்· இந்தியாவில் காற்றில் மாசடைதலும், அபாயகரமான கிருமி நுண் துகள் காற்றில் அதிகரித்துள்ளதும் மரணங்களை அதிகப்படுத்தியுள்ளது என்று சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்வுகள் எடுத்துரைப்பதை மறுக்கும் வழியில் செல்கிறது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். ஒன்று மதிப்புமிக்க லான்செட் அறிக்கை மற்றொன்று சுகாதார அளவையியல் மற்றும் மதிப்பீட்டுக்கான அமெரிக்க ஸ்தாபனத்தின் அறிக்கை, இந்த இரண்டிலும் மோசமான காற்றினால் இந்தியாவில் 2015-ல் 10 லட்சம் பேர் இறந்துள்ளதாக எச்சரித்தது.
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்·
சர்வதேச அளவில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயுத விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித் திருப்பதாகவும், ஆயுத இறக்கு மதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2012 முதல் 2016 வரையிலான காலத்தில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. அதாவது சர்வதேச அளவிலான ஒட்டு மொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு மட்டும் 13 சதவீதமாக இருந்தது. இது 2007 முதல் 2011 வரையிலான காலத்தில் 9.7 சதவீதமாக இருந்தது. அப்போதும் இந்தியா தான் இறக்குமதியில் முதலிடத்தில் இருந்தது.
இந்தியா,ருவான்டா இடையே 3 ஒப்பந்தம் கையெழுத்து·
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி 5 நாள்பயணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான ருவான்டா,உகாண்டாவுக்கு சென்றுள்ளார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே அறிவியல்,தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் ருவான்டாவில் தொழில் மேம்பாட்டு மையம் அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இன்று சர்வதேச இரட்டையர் தினம்·
ஆண்டுதோறும் பிப்ரவரி 22-ம் தேதி சர்வதேச இரட்டையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 74 இரட்டையர்கள் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்
ஐ.நா. அலுவலகத்தில் ரஷிய தூதர் திடீர் மரணம்
நியூயார்க் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விட்டாலி சுர்கின் நேற்று முன் தினம் பிற்பகலில் தனது ஐ.நா அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென மரணம் அடைந்தார். விட்டாலி சுர்கினுக்கு நேற்று 65-வது பிறந்த நாளாகும். இந்நிலையில் பிறந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக இத்துயர சம்பவம் நிகழ்ந்தது.
சர்வதேச பாதுகாப்பு மாநாடு·
ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த 17-ம் முதல் 19-ம் தேதி வரை சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
வர்த்தகத்தில் இஸ்ரோ முந்துகிறது:
சீன அரசு ஊடகம் ஒப்புதல்· விண்வெளி துறை வர்த்தகத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) முந்திச் செல்கிறது என்று சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது. இஸ்ரோ அமைப்பு அண்மையில் 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது. இதில் 96 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. மிகக் குறைவான கட்டணம் என்பதால் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவை உலக நாடுகள் நாடுகின்றன.
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் தேர்வு·
அமெரிக்காவின் புதிய பாது காப்பு ஆலோசகராக மெக் மாஸ்டர் தேர்வு செய்யப்பட் டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற வுடன் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினென்ட் ஜெனரல் மைக்கேல் பிளின் நியமிக்கப்பட்டார். ஆனால் ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக 3 வாரங்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்
2025-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலர்:·
இந்தியாவில் இளைஞர்களின் எண் ணிக்கை அதிகமாக இருப்பது,மத்திய அரசின் கொள்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வரும் 2025-ம் ஆண்டில் இந்திய பொருளா தாரத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலராக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கணித்திருக்கிறது. தற்போது இந்திய பொருளா தாரத்தின் மதிப்பு 2.2 லட்சம் கோடி யாக இருக்கிறது. சர்வதேச அளவில் 7வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 1,700 கோடி டாலராக இருக்கிறது. ஆனால் சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளைவிட இந்தியாவின் தனிநபர் வருமானம் குறைவாகும். வரும் 2025-ம் ஆண்டு இந்தியா வின் தனிநபர் வருமானம் 125% உயர்ந்து 3,650 டாலராக இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்திருக்கிறது. தற்போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை 40 கோடி என்னும் அளவில் இருக்கிறது.
ADS HERE !!!