TN Police Constable Exam Tamil Current Affairs February 2017
தேசிய செய்திகள்:
*.பல்வேறு நாடுகளில் இருந்து கண்டெய்னரில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் டெல்லியின் துக்ளக்காபாத்தில் உள்ள இன்லேண்ட் கண்டெய்னர் டெம்போவில் வந்து இறங்குவது வழக்கம். இந்தியாவின் பிரபல நிறுவனங்களின் ரூ. 5 கோடியே 41லட்சம் அழகு சாதனப் போலி தயாரிப்புகள் கண்டெய்னரில் சிக்கின.
*.பாராளுமன்றத்தில் மத்திய நிதிமந்திரி அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய அரசில் புதிதாக 2லட்சத்து 83ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
*.ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இருவரில் யாருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை தீர்மானிக்க ஒரு வாரத்துக்குள் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி பலப் பரீட்சை நடத்த உத்தரவிட கோரி ஆளுநர் வித்யாசாகர்ராவுக்கு அட்டார்னி ஜெனரல் யோசனை தெரிவித்தார்.
*.கர்நாடகத்தில் கம்பளா போட்டியை நடத்துவதற்கு கர்நாடக சட்டசபையில் நேற்று சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
*.தமிழக அரசியல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என மத்திய உள்துறை இணை மந்திரி கிரண்ரிஜ்ஜூ கூறினார்.
*.இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ முதல்முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சியிலும் 2வது முறையாக செவ்வாய் கிரக ஆராய்ச்சியிலும் ஈடுபடவுள்ளது. இதற்கான நிதி பட்ஜெட்டிலும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி தளத்திலிருந்து ஒரே சமயத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் வரலாற்று சாதனையை பிப்ரவரி -15ல் இஸ்ரோ நிகழ்த்தவுள்ளது. இதில் 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் இந்தியாவின் 3 செயற்கைக்கோள்களும் அடங்கும். 96செயற்கைக் கோள்கள் அமெரிக்கா சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.
*.மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக விலங்குகளை கொள்வதில் தவறில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பன்னாட்டு செய்திகள்:
*.பாகிஸ்தானில் உள்ள லாகூரின் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த குண்டுதாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
*.வடகொரியாவின் அதிநவீன ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்டமுடிவு செய்துள்ளனர்.
*.பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையை (செனட்) துணைத்தலைவர் மௌலானா அஃப்துல் காபூர்; தைரிக்கு விசா நிராகரிக்கப்பட்டது.
*.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஒரோவில்லேஎன்ற இடத்தில் 235மீ உயரம் கொண்ட மிகப்பெரிய அணை உள்ளது. இதுதான் அமெரிக்காவின் மிக உயரமானஅணையாகும்.அமெரிக்காவில் தொடர்மழை பெய்வதால் இந்த அணையில் உடையகூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
*.இந்திய வம்சாவளி ஹாலிவுட்நடிகர் தேவ் படேலுக்கு சிறந்த துணைநடிகர் விருது ‘லயன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்ததற்காக லண்டனில் பிப்ரவரி-1ல் மிகஉயர்ந்ததிரைப்பட விருதான பாஃப்டாவிருது வழங்கப்பட்டது.
*.பாஃப்டா விருது பிரிட்டன்மற்றும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது. விளையாட்டுச் செய்திகள்:
*.11வது பெண்கள் உலககோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது.
*.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்டீவன் சுமித் தலைமையிலான இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்போட்டி தொடரில் விளையாடுகிறது.
*.வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜ மாணிக்கம் நினைவு 2வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 19ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறும். தொடக்க ஆட்டத்தில் ஐ.ஓ.பி அணி வெற்றி பெற்றது.
*.19 வயதுக்குட்பட்ட இந்தியா -இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் நாக்பூரில் நேற்று தொடங்கியது.
*.வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்இந்திய அணி 208ரன்கள்வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
*.சையது முஷ்டாக்அலி கோப்பைக்கான மண்டல அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் தலைமையிலான வடக்கு மண்டல அணியை பார்த்தீவ் பட்டேல்தலைமையிலான மேற்குமண்டல அணி தோற்கடித்தது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்:
*.மண்டல விமான நிறுவனமான ஜூம்ஏர் விமான போக்குவரத்து நேற்று (பிப்ரவரி -13) தொடங்கியது. மண்டல அளவில்செயல்படும் ஆறாவது விமான நிறுவனம் இது.முதல் போக்குவரத்து புதுடெல்லி – துர்காபூருக்கு இடையேதொடங்கியது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
*.டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் கிளேடன் நிறுவனம் அமெரிக்காவில் தன்னுடைய முதல் ஆலையை தொடங்குகிறது. சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தேவையான அலுமினிய பாகங்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் மூன்று ஆலையும் ஓசூரில் ஒரு ஆலையும் இந்நிறுவனத்துக்கு உள்ளன.
*.என்.எஸ்.இ புதிய தலைமை செயலதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள விக்ரம் லிமயே சம்பளம் ஆண்டுக்கு ரூ.8 கோடி ஆகும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
*.இந்தியாவில் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் எல்ரூடி நிறுவனம் ஐரோப்பிய பாதுகாப்பு துறைநிறுவனமான எம்.பி.டி.ஏவுடன் நேற்று (பிப்ரவரி -13) ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தக் கூட்டுத்திட்டத்தில் எல்ரூடி பங்கு மூலதனம் 51% ஆகவும் எம்.பி.டி.ஏவின் பங்கு மூலதனம் 49% ஆகவும் இருக்கும்.
*.இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கிக்கு 2017-18ம் நிதியாண்டுக்கு மத்திய அரசு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வங்கியில் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.800 கோடியாகும். இந்த வங்கியில் தனிநபர் கணக்கில் ரூ 1 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம்.
*.போர் கப்பல்களில் பழுது நீக்கித் தருவது தொடர்பாகரிலையன்ஸ் டிஃபன்ஸ்ரூ என்ஜினியரிங் மற்றும் அமெரிக்க கடற்படை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நியமனச் செய்திகள்:
*.மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான துர்க் மெனிஸ்தானில் நடந்த அதிகர் தேர்தலில் முன்னாள் அதிபர் குர்பாங்குலி பெர்டைமுகாமெடோவ் 97.69% வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் 3வது முறையாக பதவியேற்றுள்ளார்.
*.இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதியகேப்டனாக ஜோரூட்டும், ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ்; துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.