TN Police Constable Exam Study Material - Psychology Questions - காவலர் உளவியல் திறன் தேர்விற்கான உளவியல் வினா - விடைகள் !!
1. கூட்டுக் கொள்ளையருக்கு புகலிடம் தருபவரை கைது செய்ய பிடியாணை தேவையா ?
பிடியாணை தேவையில்லை
2. நீதிமன்ற நடவடிக்கையில் முரணான அறிக்கை தந்தால் எந்த பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படும் ?
இ. த. ச. 219
3. உட்கருத்துடன் கைது செய்யாதிருத்தல் எந்த பிரிவின் கீழ் தண்டனைக்குரியது ?
இ. த. ச. 221
4. கைது செய்ய வேண்டியவரை கைது செய்யாது இருத்தல் குற்றப் பிரிவுக்கு ஜாமீன் உண்டா ?
ஜாமீன் இல்லை
5. காவலிருந்து தப்பிச் செல்ல விடுத்தல் எந்த பிரிவின் கீழ் குற்றம் ?
இ. த. ச. பிரிவு 223
6. வேறோருவரை கைது செய்வதை எதிர்த்தல் மற்றும் தடுத்தல் எந்த வகையில் குற்றம் ?
இ. த. ச. பிரிவு 225
Visit www.jprnotes.blogspot.com
7. வேறோருவரை கைது செய்வதை எதிர்த்தல் மற்றும் தடுப்போரை விடுவிக்க ஜாமீன் உண்டா ?
ஜாமீன் இல்லை
8. நீதிமுறை பொது ஊழியரை நிந்தித்தால் என்ன தண்டனை ?
இ. த. ச. பிரிவு 228 இன் படி ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய மெய்க்காவலோ அல்லது ஓராயிரம் வரை அபாரதம் அல்லது இரண்டும்
9. சில குற்றங்களினால் பாதிக்கப் பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடல் எந்த வகையில் குற்றம் ?
இ. த. ச. பிரிவு 228 அ
10. பிணையத்தில் அல்லது உறுதி முறியின் பேரில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் தோன்றதிருந்தால் அவரைப் பிடிக்க பிடியாணை தேவையா ? அவருக்கு ஜாமீன் உண்டா ?
பிடியாணை தேவையில்லை, ஜாமீன் கிடையாது
Visit www.jprnotes.blogspot.com
11. கள்ள நாணயம் தயாரித்தல் எந்த பிரிவில் குற்றம் ?
இ. த. ச. 321
12. கள்ள நாணயம் தயாரிப்போரை பிடிக்க பிடியாணை தேவையா ? அவருக்கு ஜாமீன் உண்டா ?
பிடியாணை தேவையில்லை, ஜாமீன் கிடையாது
13. கள்ள நாணய கருவிகள் செய்தல், விற்றல் எந்த பிரிவில் குற்றம் ?
இ. த. ச. 233
14. இந்திய கள்ள நாணய தயாரிப்பு கருவி தம் கைவசம் வைத்திருத்தல் எந்த பிரிவில் குற்றம் ?
பிரிவு 235
15. கருச்சிதைவுக்கான தண்டனை குற்றப்பிரிவு என்ன ?
பிரிவு 312
16. பெண்ணின் இசைவின்றி கருச்சிதைவு குற்றப்பிரிவு என்ன ?
பிரிவு 313
17. கருச்சிதைவுக்குட்பட்ட பெண் மரணத்திற்கான குற்றப்பிரிவு என்ன ?
பிரிவு 314
18. குழந்தை மரணத்தை ஏற்படுத்துதல் குற்றப்பிரிவு என்ன ?
பிரிவு 315
19. மீள உயிர் பெற்ற குழந்தையின் மரணத்தை ஏற்படுத்துதல் குற்றப்பிரிவு என்ன ?
பிரிவு 316
20. இறந்த குழந்தை மறைத்தல் குற்றத்திற்கான பிரிவு என்ன ?
பிரிவு 318
21. வெற்றி என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் போது, தோல்வி என்பது எதனைக் குறிக்கும் ?
அ) விரயம் ஆ) ஏமாற்றம் இ) ஆத்திரம் ஈ) கோபம்
விடை : ஆ) ஏமாற்றம்
22. WOLF என்பது FLOW ஆனால் 8526 என்பது ?
அ) 2856 ஆ) 5682 இ) 5862 ஈ) 6258
விடை : ஈ) 6258
23. 0.5, 0.55, 0.65, 0.8 ?
அ) 0.9 ஆ) 0.82 இ) 1 ஈ) 0.95
விடை : இ) 1
24. நுண்ணறிவுச் சோதனைகள் தற்கால மாணவர்களை ................... அடிப்படையில் வகைப்படுத்த பயன்படுகிறது.
அ) வயதின் ஆ) ஆற்றலின் இ) தேர்ச்சி ஈ) நுண்ணறிவு
விடை : ஈ) நுண்ணறிவு
25. இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து, எந்த நாளாக இருக்கும் ?
அ) திங்கள் கிழமை ஆ) வெள்ளிக்கிழமை இ) புதன்கிழமை ஈ) சனிக்கிழமை
விடை : ஆ) வெள்ளிக்கிழமை
26. எல்லா சிறைவாசிகளும் ஆண்கள், எந்த ஆணும் படிக்கவில்லை, இந்த கூற்றின் படி, எந்த விடை சரியானது ?
அ) எல்லா சிறைவாசியும் படிக்கவில்லை
ஆ) பெண் சிறைவாசிகள் கிடையாது
இ) எல்லா சிறைவாசிகளும் பெண்கள்
ஈ) சில சிறைவாசிகள் படிக்கவில்லை
விடை : அ) எல்லா சிறைவாசியும் படிக்கவில்லை
TN Police Constable Exam Study Material - Psychology Questions - காவலர் உளவியல் திறன் தேர்விற்கான உளவியல் வினா - விடைகள் !!