தேசிய செய்திகள்:
*.பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை ஒண்றிணைக்கும் தி;ட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
*.செல்லிடப்பேசி வாயிலாக வருமானவரி செலுத்தவும், பான் எண் வேண்டி விண்ணப்பிப்பதற்கும் பிரத்யேக செயலி ஒன்றை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலியின் வாயிலாக விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் பான் எண் வழங்கப்படும்.
*.பிரதமரின் வீட்டுவசதித் திட்ட இணையதளப் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர், வெங்கய்யா நாயுடு ஆகியோரின் படங்களை நீக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
*.வெள்ளிக் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான செயற்கைக்கோளை அனுப்புவதே அடுத்த இலக்கு என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
*.பிரமோஸ் ரக ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு உருவாக்கி சோதித்து வருகிறது.
*.‘சார்க்’ கூட்டமைப்பு நாடுகளுக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ‘ஜி.எஸ்.எல்.வி.மார்க் -2’ ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
*.ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி-37 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது.
www.jprnotes.blogspot.com
பன்னாட்டு செய்திகள்:
*.ஐ.நா. அமைதிப்படையின் புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூன்-பியர் லாக்ரோயிக்ஸை (56) ஐ.நா.பொதுச்செயலர் ஆன்டோனியோ குட்டெரஸ் நியமித்துள்ளார்.
*.மேற்கு மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அதிபர் அல்மாஸ்பெக் அடாம்பேயே வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
*.தைவான் நாட்டைச் சேர்ந்த எம்.பி.குவான் பிலிங் தலைமையிலான நாடாளுமன்ற குழுவினர் இந்தியா வந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
*.மேற்குவங்காள மாநிலம் மால்டா மாவட்டத்திலுள்ள கலியாசக் பிளாக், சுரியந்த்பூர் பகுதியில் ரூ.2லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்களை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
*.சீனாவில் ஹ_பெய் மாகாண கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக திகழ்ந்து வந்த ஜூ பென்சுனுக்கு ஊழல் வழக்கில் 15ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
*.அமெரிக்காவில் ‘எச் 1 பி’ விசா மோசடியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஹிரால் பட்டேல் (34) என்ற பெண் நெவாக்மத்திய கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
www.jprnotes.blogspot.com
விளையாட்டுச் செய்திகள்:
*.உலகின் மின்னல் வேக மனிதராக வர்ணிக்கப்படும் தடகளவீரர் உசேன்போல்ட், 2017ம் ஆண்டுக்கான ‘சிறந்த விளையாட்டு வீரர்’ விருதும், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சைமன்பில்ஸ் ‘சிறந்த விளையாட்டு வீராங்கனை’ விருதும் வென்றுள்ளனர்.
*.சாம்பியன்லீக் கால்பந்தாட்ட போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பாரீஸ் செயின்ட்ஜெர்மெயின் அணி பார்சிலோனா அணியை வீழ்த்தியது.
*.பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் தகுதிசுற்று போட்டியில் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது.
*.ஐபிஎல் டி20 தொடரின் 10வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல்-5ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
*.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிவீரர்கள் நேற்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
*.மெம்பிஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பார்படாஸ் வீரர் டேரியன்கிங் பெர்னார்டு டாமிக்கை வீழ்த்தி சாதனை படைத்தார்.
www.jprnotes.blogspot.com
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்:
*.இந்தியாவில் காப்பீடு வளர்ச்சி நடப்பாண்டு இறுதிக்குள் 4%க்கு அதிகமாக இருக்கும் என அசேசேம் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.
*.இன்போசிஸ் நிறுவன விவகாரம் குறித்து பொதுவெளியில் மற்றும் ஊடகங்களில் இனி பேசப்போவதில்லை என இன்போசிஸ் நிறுவன தலைவர் ஆர். சேஷசாயி தெரிவித்தார்.
*.எப்.எம்.சி.ஜி துறையை சேர்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகரலாபம் 8.6% சரிந்து ரூ.167 கோடியாக உள்ளது.
*.லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை 3 ஆண்டுக்குள் பட்டியலிடமத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
*.நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியா 5062 கோடி டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
*.இந்திய காமர்ஸ் துறையின் மதிப்பு தற்போது 600-800 கோடி டாலர் வரை உள்ளது. வரும் 2021ம் ஆண்டு 5000- 5500 கோடி டாலராக இருக்கும் எனஇந்திய ரீடெய்ல் சங்கம் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குழும ஆய்வில்தெரியவந்துள்ளது.
Thanks to We Shine Academy