TN Police Constable Exam Tamil Current Affairs 18th February 2017
தேசிய செய்திகள்:
*.இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சியை விட4 முதல் 5% அதிக வளர்ச்சியை ஜார்க்கண்ட் மாநிலம் பெறும் என மத்தியநிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
*.ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.கவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ள முதல்வர் மெஹயூபா முஃப்தி தனது அமைச்சரவையை பிப்ரவரி -16ல் விரிவுபடுத்தினார்.
*.ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை முன்னெடுத்து செல்வது தொடர்பான பணிகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக புதிய நெறிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
*.இஸ்லாமிய சமூகத்தில் கடைபிடிக்கப்படும் விவாகரத்து நடைமுறைகள், பலதார திருமணமுறை உள்ளிட்டவற்றை ரத்து செய்வது தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
*.வெளி மாநிலத்தில் பதிவுசெய்து விட்டு சொகுசு காரை மும்பையில் ஓட்டிய எந்திரன் பட வில்லன் நடிகருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
*.தமிழகத்தின் 13வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவியேற்பு உறுதிமொழியும்ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
*.திருமண செலவு 5 லட்சத்தை தாண்டும் ஆடம்பர திருமணங்களை நடத்தும் குடும்பங்கள் திருமண மொத்த செலவில் 10மூ தொகையை ஏழைப்பெண்கள் திருமணநிதி உதவி திட்டத்துக்கு வழங்க வேண்டும் என தனிநபர் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
*.உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கௌல் உள்பட 5 பேர் நியமிக்கப்பட்ட பிறகும் உச்ச நீதிமன்றத்தில் மேலும் 8நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது.
*.டெல்லியில் நாளை மேக் இன் ஸ்டீல் குறித்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை மத்திய மந்திரி சவுத்ரி வீரேந்தர்சிங் தொடங்கி வைக்கிறார். இம்மாநாட்டில் எஃகு துறையை சேர்ந்த 25 நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள்.
*.யுபிஎஸ்சி தலைவரின் சம்பளத்தை ரூ 2,50,000 ஆகவும் யுபிஎஸ்சி உறுப்பினர்களின் சம்பளத்தை ரூ 2,25,000 ஆகவும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பரிந்துரைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்அளித்துள்ளார்.
www.jprnotes.blogspot.com
பன்னாட்டு செய்திகள்:
*.அமெரிக்கக் கூட்டுப்படை என்றழைக்கப்படும் நேட்டோவுக்கு கூடுதல் நிதி அளிக்காவிட்டால் அந்தப்படைக்கு அளித்துவரும் ஆதரவைக் குறைப்போம் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் தெரிவித்துள்ளார். நேட்டோவில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன.
*.இஸ்ரோ பிஎஸ்எல்விசி -37 ராக்கெட்டில் வானிலை கணிப்பு சார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள்களையும் 103 நேனோ சாட்டிலைட்டையும் விண்வெளிக்கு வெற்றிகரமாகஅனுப்பி ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது.
*.உலகில் முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வரும். செவ்வாய் கிரகத்தில் ஓர் உயிரின வாழிடம் ஏற்படுத்துவது இதன் நோக்கம்.
*.உலகிலேயே மிகப்பெரிய அச்சுறுத்தலான நாடு பாகிஸ்தான் என அமெரிக்க உளவு நிறுவனத்தின் சிஐஏ அதிகாரி கெவின் ஹல்பர்ட் ‘சைபர் பிரீப்’ என்ற இணையதளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
*.சீனாவில் ஊழல் குற்றச்சாட்டில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் மூத்த நீதிபதி ஜிஸியாயமிங்குக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து பீஜிங் நகரகோர்ட் தீர்ப்பளித்தது.
*.அயர்லாந்து நாட்டில் பிரதமர் என்ட் கென்னியின் சிறுபான்மை அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி பெற்றது.
*.பிப்ரவரி 16ல் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் காஜா ஆசிப்முன்னிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், காம்ரா விமானப்படை தளத்தில் உருவான “ஜே.எப் -17 தண்டர்” இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீன-பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பில் உருவான 16 போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையில் இணைக்கப்பட்டன.
*.ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் பிப்ரவரி மாத இறுதியில் ‘உலக அலைபேசி மாநாடு’ நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவின் பிரபல மாடல் 3310 மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிப்ரவரி -26 அன்று நோக்கியோ ஆண்டராய்ட் இயங்கு செயலியை கொண்ட தன்னுடைய முதல் அலைபேசி சி6-ஐ சீனாவில் வெளியிட உள்ளது.
விளையாட்டுச் செய்திகள்:
*.மேற்கிந்திய தீவுகள் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீச ஐசிசி அனுமதியளித்துள்ளது.
*.இந்திய ‘ஏ’ ஆஸ்திரேலியா இடையிலான நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் மும்பையில் இன்று தொடங்கியது.
*.இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையிலான ஆசிய –ஓசியானியா குரூப்-1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வரும் ஏப்ரலில் பெங்களுருவில் நடைபெறும் என அகில இந்தியடென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.
*.சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரியல் மாட்ரிட் அணி நபோலி அணியை வீழ்த்தியது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்:
*.ஜார்கண்ட் மாநிலத்தில் பலதுறைகளில் ரூ. 20000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ்அதானி தெரிவித்தார்.
*.பணமதிப்பு நீக்கம் காரணமாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் நெட்வொர்க்தலைமைச் செயலதிகாரி ரத்னாவிஸ்வநாதன் தெரிவித்தார்.
*.இந்தியாவின் முக்கியமான குறியீடான நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில் மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய பங்குகள் இணைகின்றன.
*.நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியா 5062 கோடி டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் மூன்றாவதாக உள்ளது.
*.ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் அடுத்த நிதியாண்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பினை இந்தியஐடி நிறுவன சங்கமான நாஸ்காம் வெளியிடுகிறது. அமெரிக்க அதிபர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஐடிதுறை வளர்ச்சி கணிப்பு மேமாதம் தள்ளிப் போக உள்ளது.
*.ஏர் இந்தியா விமான சேவையில் முதன்முதலாக ‘ஏர்பஸ் 320 நியோ’ ரக விமானம் இணைந்துள்ளது.அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட நவீன ரக என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் 12 உயர்வு வகுப்பு இருக்கைகள் உள்ளிட்ட 162 இருக்கைகளை கொண்டுள்ளது என ஏர் இந்தியா தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஷ்வனி யோஹனி தெரிவித்துள்ளார்.
*.ஜார்க்கண்டில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களில் ரூ.6600 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக வேதாந்தா ரிசோர்ஸ் குழுமத்தின் தலைவர் அனில்அகர்வால் தெரிவித்துள்ளார்.
*.மஹிந்திரா & மஹிந்திராநிறுவனம் 3வகையான புதிய சரக்கு வாகனங்களை பிப்ரவரி -16ல் சென்னையில் அறிமுகம் செய்கிறது. பயணிகள் வாகனப் பிரிவில் 4 புதிய தயாரிப்புகளையும், சரக்குவாகன பிரிவில் 3 புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மஹிந்திராவின் ‘எப்ரோ’ தளத்தில் 11 வகையான புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நியமனச் செய்திகள்:
*.வெளியுறவு துறை செய்தி தொடர்பாளராக பதவி வகித்துவந்த விகாஸ் ஸ்வரூப் கனடாவுக்கான புதிய இந்தியதூதரான நியமிக்கப்பட்டுள்ளார்.