TN Police Constable Exam Tamil Current Affairs 18th February 2017
தேசிய செய்திகள்:
*.மெட்ராஸ் மேலாண்மை சங்கத்தின் ஆண்டு மாநாடு,“இந்தியா 2017 – நவீன யுகத்தில் வெற்றிக்கான வழி” என்ற தலைப்பில் சென்னையில் பிப்ரவரி -17ல் நடத்தப்பட்டது. மத்திய இணையமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
*.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர ்மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 2004 -2016 வரை 12 ஆண்டுகள் நடைபெற்றதில் செலவாகிய 12 கோடிகளை கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென கேட்டுள்ளது.
*.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கௌல் உள்பட 5பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பிப்ரவரி-17ல் பதவியேற்றனர். இதனால் உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.
*.உச்ச நீதிமன்ற நீதிபதிகள்28 பேரில் பெண் நீதிபதிஒருவர் மட்டுமே உள்ளார். தற்போது ஆர்.பானுமதி மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் ஒரே பெண் ஆவார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 6 பெண்கள் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர்.
*.கேரள மாநிலத்திலுள்ள பூஜப்பூரா சிறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் அல்லது மேமாதத்தில் ஆண்களுக்கான அழகு நிலையம் திறக்கப்படவுள்ளது. சிறைக் கைதிகளுக்காக மாநில அரசின் சிறைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
*.நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் விரைவில் சரிவிலிருந்து மீண்டெழும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
*.சந்தன கடத்தல் வீரப்பன் வழக்கில் கிடைத்த வெற்றி தனிமனிதன் ஒருவனுக்கு கிடைத்த வெற்றியல்ல கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என ஓய்வு பெற்ற டி.ஜி.பியும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார் தெரிவித்தார்.கே.விஜயகுமார் வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் தனது அனுபவங்களை “வீரப்பன் சேசிங் தி பிரிகண்ட்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார்.
*.மகாத்மா காந்தியை வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்ஸே கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ல் சுட்டுக்கொன்றார். தற்போது நாதுராம் கோட்ஸேவின் வாக்குமூலத்தைதேசிய ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என மத்திய தகவலாணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.
*.ஜிஎஸ்டி கவுன்சிலின் 10வது ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிப்ரவரி -18 (இன்று) நடைபெறுகிறது.
*.கோவை ஈஷா யோகா மையம் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள 112 அடி உயர “ஆதியோகி” சிலைதிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இது பிப்ரவரி -24ல் நடைபெற உள்ளது.
*.பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஓட்டுக்களை மொத்தமாக இணைத்து அளிவிக்கும் “டோட்டலைசர்” எந்திரத்தை அறிமுகப்படுத்தலாம் என்ற தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்தது.
*.கல்விக்கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் வசதிக்காக மத்தியஅரசு வித்யாலட்சுமி போர்ட்டல் எனப்படும் இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்தார்.
பன்னாட்டு செய்திகள்:
*.பாகிஸ்தானில் வழிபாட்டு தல தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 39 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*.நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்ற குழுக்கூட்டம் காத்மண்டில் பிப்ரவரி 17ல் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.ஒலி சார்க் அமைப்பைஇந்தியா பலவீனப்படுத்தி வருகிறது என குற்றஞ்சாட்டினார்.
*.வெளிநாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் விரைவில் இயற்றப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
*.இராக் தலைநகர் பாக்தாதில்ஷியா பிரிவினரை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 59பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
*.அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தேர்வு செய்யப்பட்ட ராபர்ட் ஹாவர்ட் தனது பதவியை ஏற்க இயலாது என நிராகரித்து விட்டார்.
*.தென்கொரியாவின் அதிபர் பார்க் கியுன் ஹையின் நெருங்கிய தோழியான சோய் சூன்சில் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது தொண்டு நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகைகளை நன்கொடை பெற்றதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக பார்க் கியுன் ஹை6மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
*.ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. அங்கு அமீரகத்தைச் சேர்ந்த ஒருவீரர் கொல்லப்பட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்:
*.பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் தகுதி போட்டியில் சூப்பர்சிக்ஸ் சுற்றில் இந்திய அணி 2வது வெற்றிபெற்று உலக போட்டிக்கு தகுதி பெற்றது.
*.இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், ஷான்மார்ஷ் சதமடித்தனர்.
*.தென்காப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
*.மார்ச்- 15 அன்று கொழும்பில் 2வது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணிவிளையாட உள்ளது. இது வங்காள தேசத்தின் 100வது டெஸ்டாகும். மொத்தம் 10 அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறது. இதில் 10வது மைல் கல்லை கடக்கும் கடைசியணி வங்காளதேசம் தான்.
*.ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டது.
*.சர்வதேச பேட்மிண்டன் வீராங்கனைகளின் புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 5வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 5 இடத்திற்குள் சிந்து வருவது இதுவே முதன்முறை.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்:
*.இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணைய புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட அஜய் தியாகியின் பதவி காலத்தை மத்திய அரசு 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்துள்ளது.
*.இந்தியப் பங்குச்சந்தைகளில் பிப்ரவரி -17ல் நடைபெற்ற வர்த்தகம் 5 மாதங்களில் காணா வகையில் ஏற்றம் கண்டுள்ளது.
*.நாட்டின் பெரிய நிறுவனமானஐ.டி.நிறுவனம் டிசிஎஸ் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் கணிசமான பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தில் உள்ளது.
*.பல்வேறு பொதுத்துறை வங்கிகளுக்கான 8 செயல் இயக்குநர்களை மத்தியஅரசு நியமித்துள்ளது.
நியமனச் செய்திகள்:
*.நீலம் தாமோதரன் மற்றும் அதனு குமார் தாஸ் பேங்க் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
*.கே.சுவாமிநாதன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல்இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*.அசோக்குமார் பிரதான் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*.பி.ரமணமூர்த்தி சென்ட்ரல்பாங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*.பரீத்அகமதுகான் பஞ்சாப் ரூ சிந்து வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*.எம்.கே.பட்டாச்சார்யா இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*.எஸ்.ஹரிசங்கர் அலகாபாத் வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.