கெயில் நிறுவனத்தில் அதிகாரி ஆகலாம்
இயற்கை எரிவாயுவை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் கெயில் இந்தியா நிறுவனம் 73 எக்சிகியூடிவ் டிரெயினி பணியிடங்களை பி.இ., பி.டெக். பட்டதாரிகளைக் கொண்டு, பல்வேறு பிரிவுகளில் விரைவில் நிரப்புகிறது. இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 20.1.2017 தேதியன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேரு வோருக்கு ரூ. 24,900 முதல் 50,500 வரை ஊதியம் வழங்கப்படும்.
பணி விவரங்கள்
துறை: கெமிக்கல், காலியிடம்: 23
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி.
துறை: மெக்கானிக்கல், காலியிடம்: 15
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - மெக்கானிக்கல், புரொடக்ஷன், புரொடக்ஷன் மற்றும் இன்டஸ்ட்ரியல், மேனுஃபாக்சரிங், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல்.
துறை: எலக்ட்ரிக்கல், காலியிடம்: 15. கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்.
துறை: இன்ஸ்ட்ருமென்டேஷன், : 10
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - இன்ஸ்ட்ரு மென்டேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரு மென்டேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்.
துறை: சிவில், காலியிடம்: 5
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். சிவில்
துறை: பிசினஸ் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்,
காலியிடம்: 5
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். - கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அல்லது எம்.சி.ஏ.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
இந்த ஆண்டு நடைபெறவுள்ள கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 17
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: www.gailonline.com
ADS HERE !!!