Tamil Current Affairs 3rd June 2017 TNPSC VAO Group 2A
தேசிய செய்திகள் :
1) ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இறுதிக்கட்டமாக பிரான்ஸ் சென்றடைந்தார்.
2) இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
3) கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணுமின் உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது. இந்நிலையில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 5, 6வது அணு உலைகள் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
4) ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தின் 3வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
5) பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினாலும் இந்தியா அதை கைவிடாமல் ஈடுபாட்டுடன் தொடரும் என மத்திய சுற்றச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
6) உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்ஓ) தயாரித்த பிரித்வி-2 ஏவுகணை ஒடிசா மாநிலம் சண்டிப்பூர் அருகே உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. முடிவில் இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
7) காஷ்மீர் எல்லையை ஒட்டிய பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 3 வது முறையாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
8) அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 14 ஆயிரம் கிலோமீட்டராக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அளவு இரட்டிப்பாக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பன்னாட்டு செய்திகள் :
1) வாஷிங்டன் புறநகரில் நேற்று ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ என்ற பெயரில் ஆங்கில எழுத்துக் கூட்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனன்யா வினய் என்ற மாணவி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
2) விண்வெளி கருந்துளைகளில் இருந்து புவி ஈர்ப்பு அலைகள் வெளிப்படுவதை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
3) ஏமன் நாட்டில் அல் ஹாசிம் நகர சந்தையில் நேற்று சக்திவாய்ந்த குண்டி வெடித்துள்ளது.
4) அமெரிக்க செனட் சபை அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தாபரை, அந்த நாட்டின் 6வது அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.
5) தமிழர்கள் அதிகம் வாழும் நார்வே நாட்டின் பேர்கன் நகரில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் செம்மொழித் திருநாள் விழா இன்று நடத்தப்படுகிறது.
6) இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் என்பவர் அயர்லாந்து நாட்டின் இளவயது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7) ராணுவ விமானங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றை கூட்டு நிறுவனம் மூலம் தயாரிப்பதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :
1) பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் 9முறை சாம்பியனானா ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் பாசிலாஷ்விலியாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
2) தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஹருகோ சுசுகியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
3) ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினருக்கான கூடைப்பந்து போட்டியில் திருச்சி அணி கோரக்பூர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
4) சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. இதில் ஆண்களுக்கான லீக் கைப்பந்து போட்டி வருகிற 24ம் தேதியும், பெண்களுக்கான போட்டி 26ம் தேதியும் தொடங்குகிறது.
5) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், கார்பைன் முகுருசா ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
6) ஜே.கே. டயர் நிறுவனம் மற்றும் சுஸ_கி மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் சுஸ_கி ஜிக்ஸர் கோப்பைக்கான தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம் கோவையில் ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்து 31273 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. மேலும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 37 புள்ளிகள் உயர்ந்து 9653 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.
2) இந்திய பொருளாதாரம் அடுத்த காலாண்டில் வளர்ச்சியை நோக்கி திரும்பும் என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.
3) நியூடெல்லி டெலிவிஷன் லிமிடெட் (என்டிடிவி) நிறுவனம் வர்த்தக செய்திகளுக்காக தனியாக நடத்தி வந்த என்டிடிவி பிராஃபிட் எனும் சேனலை மூட முடிவு செய்துள்ளது. மேலும் இதற்குப் பதிலாக என்டிடிவி ஆங்கில செய்தியுடன் வர்த்தக செய்திகளையும் சேர்த்து அளிக்க முடிவு செய்துள்ளது.
4) ஏர்செல், புரூக்பீல்டு நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் மூலம் ஆர்காம் நிறுவனத்தின் கடன் குறையும் என்று அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.
5) மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் தொடந்து முன்னேற்றம் கண்டு சாதனை படைத்துள்ளது.