29th May 2017 Tamil Current Affairs for TNPSC Exams
தேசிய செய்திகள் :
1) அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஜூன் 5ம் தேதி முதல் மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்றும் மேலும் ராக்கெட் செலுத்;தப்படுவதற்கான கவுண்ட்டவுன் ஜூன் 4ம் தேதி முதல் தொடங்கும் என்றும் இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.
2) அசாமில் விழுந்து நொறுங்கிய சுகோய்-30 ரக போர் விமானத்தின் கருப்பு பெட்டி ராணுவ வீரர்களால் நேற்று மீட்கப்பட்டது.
3) பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார்.
4) தெற்காசிய பிராந்தியத்தின் பிரச்சனை நிறைந்துள்ள பகுதியில் இந்தியா அமைந்துள்ளதால் 70 ஆண்டுகளுக்கும் மேல் அண்டை நாடு ஒன்று இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
5) ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு அதிகாரிகளுக்கு இணையான சில பதவிகளுக்கு ராணுவ நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் காஷ்மீரைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.
6) ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத் ரயில்வே பிரிவின் கீழ் இயங்கும் சிச்சாக்கி மற்றும் கர்மபாந்த் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் டிராக்கில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
7) வங்க கடலில் 720கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மோரா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வலுவடைந்து 24 மணி நேரத்தில் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
8) டெல்லி ஐடிஓ-காஷ்மீரி இடையேயான மெட்ரோ சேவை பணிகள் முடிக்கப்பட்டு பாதுகாப்பு குறித்த ஆய்வுப்பணிகள் சிஎம்ஆர்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு பணிகள் நிறைவடைந்ததால், பாதுகாப்பு ஒப்புதல் சான்றிதழை மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு அமைப்பு வழங்கியது. இதையடுத்து, டெல்லி-காஷ்மீரி மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது.
பன்னாட்டு செய்திகள் :
1) ஈரானிய அரசு ஆதரவு பெற்ற ஷியா துணை இராணுவம் இஸ்லாமிய அரசுப்படைகளை பின் தள்ளி மேற்கு மோசூல் நகரில் முன்னேறி ஈராக் எல்லையை சென்றடைந்தது.
2) இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை விரைவில் தூக்கில் போட வேண்டும் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்குதல் செய்துள்ளது.
3) விமானங்களில் மடிக்கணினி எடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா விரைவில் தடை விதிக்கும் என்று உள்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்துள்ளார்.
4) கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ்-இன் அனைத்து சேவைகளையும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாது என விமான போக்குவரத்து நிபுணரான ஜூலியன் பிரே தெரிவித்துள்ளார்.
5) பிலிப்பைன்ஸில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் பதுங்கியுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதலில் 61 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள் :
1) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 189 ரன்னில் வீழ்த்தி வெற்றி பெற்றது
2) ஸ்பெயினில் ஆண்டுதோறும் கோபா டெல்ரே கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதில் 2016-17ம் ஆண்டு சீசனுக்கான இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா 31 என்ற கோல் கணக்கில் ஆலாவ்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
3) கிராண்ட்ஸ்லாம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ரஷ்யாவின் மகரோவாவிடம் தோல்வி அடைந்தார்.
4) ஐஸ்லாந்து நாட்டில் சாட்டிலைட் சர்வதேச வாள்வீச்சு போட்டி நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பவானி தேவி இங்கிலாந்தின் சாரா ஜேன் ஹாம்சனை 1513 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும் சர்வதேச வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.
5) 2017ம் ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயத்தின் 6வது சுற்றான மொனாக்கோ கிரான்ட்பிரி பந்தயம் மான்ட்கார்லோ ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 129 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார்.
6) சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் தென்கொரியா சீனாவை 3-2 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
7) கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் இந்தியன் ரயில்வே அணியும், மகளிர் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் வெற்றி பெற்றன.
8) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் மாநில அளவிலான ஹாக்கி லீக் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் திருநெல்வேலி உள்பட 4 மாவட்ட அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
9) தொன்போஸ்கோ இளையோர் இயக்கம் சார்பில் 18வது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி மதுரையில் மே 23ம் தேதி தொடங்கியது. இதன் இறுதி சுற்றில் சென்னை ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை அணி சாம்பியன் ஆனது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருக்கும் சக்திகாந்த் தாஸ் பதவி காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து இந்த பொறுப்புக்கு தபன் ராய் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
2) அதிக சந்தை மதிப்பு கொண்ட 10 நிறுவனங்களில் எஸ்பிஐ மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் தவிர மற்ற 8 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.93225.53 கோடி உயர்ந்துள்ளது.
3) தனியார் நிறுவனங்களுக்கு போர் விமானங்கள், பீரங்கிகள், போர் கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பதற்கான அனுமதி வழங்க வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
4) மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154.11 புள்ளிகள் சரிந்து 30874.10 புள்ளிகளாக உள்ளது.
5) இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ64.57 காசுகளாக உள்ளது.
6) ஜி.எஸ்.டி.யில் ஆயுர்வேத தயாரிப்புகள் மற்றும் அது சார்ந்த மருந்துப் பொருள்களுக்கு 7 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.