19th May 2017 Tamil Current Affairs TN Police TNPSC VAO Group IIA
தேசிய செய்திகள் :
1) நாடு முழுவதும் அனைத்து மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2) டெல்லியில் மரணமடைந்த மத்திய மந்திரி அனில் தவே, தனது கடைசி ஆசையை உயிலில் எழுதியுள்ளார். அதில் நான் இறந்த பிறகு என்னுடைய நினைவாக எந்த நினைவுச்சின்னமோ, போட்டிகளோ, பரிசு அல்லது சிலையோ நிறுவக்கூடாது. என் நினைவாக மரங்கள் நட்டு அதை பாதுகாத்து வாருங்கள். அதைப்போல ஆறுகள் உள்ளிட்ட நீராதாரங்களை பேணி தண்ணீரை பாதுகாத்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார்.
3) ரெயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வருவதால் விபத்து தவிர்ப்பு நடவடிக்கைகளை முழுவதுமாக கவனிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் நிதி தேவைப்படுவதால் ‘பாதுகாப்பு கூடுதல் வரி’ என்ற பெயரில் ரெயில் டிக்கெட்டுகள் மீது புதிய வரி விதிப்பது பற்றி ரெயில்வே துறை பரிசீலித்து வருகிறது.
4) இந்திய பசு இனங்கள் குறைந்து வருவதை தடுக்கும் வகையில், தேசிய கொள்கை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
5) ரயில்களின் பாதுகாப்பை பலப்படுத்த நவீன தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வுத் துறையின் தகவல் சேகரிப்பு அவசியம் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
6) காணாமல் போகும் குழந்தைகள் விவகாரம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
7) கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வருகிற 29ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
8) எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டால் அவர்களுக்கு தகுந்த பதிலடி தரும் வகையில் படைகள் ஆயத்த நிலையில் இருப்பது திருப்தியளிப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
9) புனேவிலுள்ள கேலக்ஸி கேர் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
10) 2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (இஸ்ரோ) நேற்று வழங்கப்பட்டது.
பன்னாட்டு செய்திகள் :
1) சிரியாவின் ஹமா மாகாணத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
2) இலங்கையில் நடந்த போரில் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 8 வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியில் 1,50,000 ராணுவ வீரர்களை குவித்துள்ளனர்.
3) கிழக்கு சீன கடல் மீது சர்வதேச வான் பரப்பில் கதிர்வீச்சை கண்டறியும் ஓர் முயற்சியில் அமெரிக்காவின் விமானம் ஒன்று ஈடுபட்டிருந்தது. அப்போது இரு சீன சுகோய் சு-30 ரக போர் ஜெட் விமானங்கள் அமெரிக்க விமானத்தை இடைமறித்து உள்ளது.
4) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
5) வானியல் ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இந்திய விஞ்ஞானி குல்கர்னி, வார்சா பல்கலைக்கழகத்தின் ஆனட்ரெஜ் உதால்ஸ்கை, நாசாவின் நீல் கேஹ்ரல்ஸ் ஆகிய 3 பேருக்கும் இஸ்ரேல் நாட்டின் ‘டேன் டேவிட்’ விருது வழங்கப்படுகிறது.
6) பிரான்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் விண்வெளி மருத்துவம் மற்றும் உடலியலின் ஆராய்ச்சியாளர்கள் மனித உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதனின் எடையற்ற தன்மையை மீண்டும் புதுப்பித்தல் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 3 மாதம் படுக்கையில் தூங்கிக்கிட்டே இருப்பவர்களை தேடி வருகின்றனர். அந்த வேலைக்காக சம்பளமாக 12 ஆயிரம் யூரோப் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.11.2 லட்சம்) வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
7) குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அடுத்த உத்தரவு வரும் வரையில் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8) உலகம் முழுவதும் 28000க்கு மேற்பட்ட மருத்துவக் குணம் வாய்ந்த தாவர இனங்கள் இருப்பதாக லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9) கடல் பூங்காக்கள், ஆடம்பர வில்லாக்கள் மற்றும் மத்திய கிழக்கு நாட்டின் முதல் சிர்க் டூ சோலில் நிகழ்ச்சி ஆகிய அம்சங்களுடன் மனிதர்களால் உருவாக்கப்படும் மார்ஸா அல் அரப் மற்றும் புர்ஜ் அல் அரப் என்ற இரண்டு புதிய தீவுகளை £ 1.3 பில்லியன் செலவில் கட்டமைக்க துபாய் திட்டமிட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :
1) ஸ்பெயினில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கு இடையிலான புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
2) ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 3 நாடுகள் ஹாக்கி தொடர் மற்றும் அதை தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆடவர் அணியின் கேப்டனாக மன்பிரித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
3) இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் ரபேல் நடால் நிக்கோலஸ் அல்மேக்ரோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
4) பிஎஸ்ஏ சார்பில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், அகான்ஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
5) பிரெஞ்சு லீக் 1 கால்பந்து போட்டியில் மொனாக்கோ அணி, கடந்த 17 ஆண்டுகளில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
6) உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியா 123 புள்ளிகளுடன் முதலிடத்தினை பிடித்திருக்கிறது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
1) பாரத ஸ்டேட் வங்கியின் 4ம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வங்கியின் நிகர லாபம் 123மூ அதிகரித்துள்ளது.
2) வீட்டு உபயோகப் பொருட்களை தவணை முறையில் வாங்குவதற்கு சிறப்பு கடன் அட்டையை (இஎம்ஐ கார்டு) விவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
3) ஹெச் 1பி விசா நடைமுறைகளால் ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
4) நடப்பாண்டுக்கு பிறகு இந்தியாவில் கார்களை விற்கும் திட்டம் இல்லை என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
5) கல்வி மற்றும் சுகாதாரம் சேவை துறைகள் என்பதால் அவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
6) இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.64.68 காசுகளாக உள்ளது.