TN TET 2017 - தேர்விற்கு எப்படி படிப்பது டிப்ஸ்
நீங்கள் முழுக்க முழுக்க படிக்க வேண்டியது பள்ளி சமச்சீர் பாட புத்தகம்மட்டுமே. வரி விடாமல் நுணுக்கமாக ஆழமாக பாட கருத்தை உள் வாங்குதல் மிக அவசியம். உங்கள் வினாத்தாளில் இடம் பெறும் கேள்விகள் அனைத்தும் புத்தகம் தவிர வேறுஎங்கும் இல்லை.
வினா முறை எப்படி இருக்கும் ?
பல லட்ச போட்டியளரின் சிந்தனையை சோதித்து திறன் மிக்க தேர்வரை தேர்வு செய்வதேநோக்கம். எனவே கேள்விகள் அனைத்தும் மனத் திறனை சோதிக்கும் வகையிலே அமையும். வினா நேரடி எளிய வினாவாக அமையாமல் மறைமுக கடின வினா அமைப்பிலே இடம்பெறும்.
எப்படி படித்தால் வெற்றி பெறலாம் ?
* கடின உழைப்பு
* தீவிர பயிற்சி
* அன்றைய பாட பகுதியை அன்றே திருப்புதல் செய்தல்
* தேவையற்ற குறிப்புகளை (material) பயன்படுத்தும் ஆசையை குறைக்கவும்
* ஆழ்ந்து படித்தல், விரைவாக படித்தல் இரண்டும் ஒருங்கே செய்தல் அவசியம்
* முழு புத்தக வாசிப்பு கட்டாயம்
* இதுவே உங்களுக்கு கொடுக்க பட்ட கடைசி வாய்ப்பு . எக்காரணம் கொண்டும் சலிப்புகூடாது.
* முயற்சி அளவை பொறுத்து வெற்றி தூரம் அமையும்
* இணையம் வழி நேர விரயம் குறைக்கவும்
பயம் , பதட்டம் எப்படி போக்குவது ?
* நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையையே நம்பாத போது , அரசு எவ்வாறு எதிர்காலதலைமுறை உருவாக்கும் ஆசிரிய பணியை நம்பி தரும்
* எனவே வெற்றி நிச்சயம் என நீங்கள் உங்கள் மனதை தயார்படுத்துங்கள்
* பயம் , பதற்றம் வெற்றியின் எதிரிகள். அவற்றை தவிருங்கள்
கோச்சிங் செல்லலாமா ?
அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். திறன் வாய்ந்த சிறப்பான கோச்சிங் கிடைத்தால்செல்லலாம். எவ்வளவு நேரம் படிக்கலாம் ?தூக்கம் | ஓய்வு தவிர்த்து 13 - 15 மணி நேரம் படியுங்கள்
வெற்றி பெற ஒரு டிப்ஸ் ?
தெளிந்த நல்முயற்சி .
Courtesy: பதிவிட்டவருக்கு
TN TET 2017 - தேர்விற்கு எப்படி படிப்பது டிப்ஸ்