TNPSC Tamil Current Affairs - TN Police Constable Exam Tamil Current Affairs
தேசிய செய்திகள்:
*.சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் 10வது ஆண்டு ‘கிரெடாய்’வீடு விற்பனை கண்காட்சி பிப்ரவரி 10ல் தொடங்கியது. இது 3 நாள்கள் நடைபெறும். இந்த கண்காட்சியில் 75க்கும்மேற்பட்ட கிரெடாய் மனை வணிக விற்பனையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
*.தமிழக அரசியல் நிலவரம் குறித்து முன்னாள் கவர்னர் ரோசய்யா மத்திய அரசின் ஆலோசனையை பொறுத்தேகவர்னரின் முடிவு இருக்கும் என கூறினார்.
*.நிலைத்த சமூக முன்னேற்றத்துக்கு பெண்கள் மேம்பாடு அவசியம்என சென்னைக்கான துணைத்தூதர் பரத்ஜோஷி கூறினார்.
*.பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தான் இந்தியா விரும்புகிறது எனஅந்நாட்டுக்கான இந்திய துணைத்தூதர் கௌதம் பாம்பாவாலே தெரிவித்தார்.
*.நாடு முழுவதும் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் பொது விநியோக முறையை ‘ஆதாருடன்’ இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
*.2018-19 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வைநடத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
*.பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதாதாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
*.தேர்தல் சமயங்களில் ஏற்படக்கூடிய தகராறுகளை உரிய காலத்துக்குள் தீர்த்து வைக்க சிறப்பு வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் நியமிக்கப்பட வேண்டும் எனசட்ட விவகாரங்களுக்கான நாடாளுமன்றக்குழு பரிந்துரைத்துள்ளது.
*.ஆந்திர மாநிலம் அமராவதி நகரில் ‘தேசிய பெண்கள் பாராளுமன்றம்’ என்னும் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இதில்கலந்து கொண்ட மத்திய மந்திரி வெங்கையா நாயுடு டெல்லி மேல்சபையில் பா.ஜனதா பெரும்பான்மை பெற்றதும், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என கூறினார்.
பன்னாட்டு செய்திகள்:
*.சர்வதேச நேரப்படி பிப்ரவரி 10ம் தேதி 22.34 மணிக்கு தொடங்கும் கிரகணம் அடுத்தநாள் 2.53 வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் சந்திர கிரகணம் பனி நிலவாகத் தெரியும். 45p என்னும் வால் நட்சத்திரமும் நடு இரவில்தோன்றும்.பிப்ரவரியில் தோன்றும் இந்த முழுநிலவு பனிநிலவு என அழைக்கப்படுகிறது. இந்த 45p வால் நட்சத்திரம்1948ல் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
*.சீன அதிபர் ஜின்பிங்குடன்தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘ஒரே சீனம்’ என்ற சீனக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
*.இந்தியா -இஸ்ரேல் இடையே ராஜீய ரீதியிலான நட்பு தொடர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யமுனை நதிக்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் இஸ்ரேல் நிறுவனம ்ஈடுபட்டுள்ளது என இஸ்ரேல்தூதர் டேனியல் கார்மன் தெரிவித்தார்.
*.மருந்து மாஃபியா கும்பல்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட 1000 ‘ஜன் ஒளஷதா’ மருந்தகங்களை (மக்கள் மருந்தகங்கள்) திறப்பதற்காக என்.ஒய்.சி.எஸ் சங்கத்துடன் மத்தியஅரசு கடந்த மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது.
*.இரான் தனது 1979ல் இஸ்லாமிய புரட்சியை ‘அமெரிக்காவுக்கு மரணம்’ உள்ளிட்ட எதிர்ப்பு கோஷங்களுடன் கொண்டாடியது.
*.அப்சல் குரு நினைவு நாளையொட்டி பிரிவினைவாதிகளின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர்தலைநகர் ஸ்ரீநகர் மற்றும்ஷோபியான் நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.டெல்லி திஹார் சிறையில் கடந்த 2013, பிப்ரவரி 9ம் தேதி அப்சல் குரு தூக்கில் இடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
*.7 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை நீக்க முடியாது என அப்பீல் கோர்ட் தீர்ப்பளித்தது.
*.கடந்த 1962ல் இந்திய–சீனப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வழிதவறி அஸ்ஸாம் எல்லைக்குள் வந்த வாங் கூஎன்ற சீன ராணுவ வீரரை இந்திய பாதுகாப்பு படையினர் சிறை பிடித்தனர். அதன் பிறகு 6 ஆண்டுகாலம் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் கைதியாக அடைபட்டிருந்து விடுவிக்கப்பட்டார்.
*.ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியின் 38வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஈரான் தலைவர் சயீத்அலி ஹ_சைனி கமேனிக்கு பிரணாப் முகர்ஜி அனுப்பிய வாழ்த்து செய்தியில் ஈரானுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
*.குவைத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி பிப்ரவரி 18ம் தேதி நடைபெற உள்ளது. அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு துறைகளின் பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
*.பிப்ரவரி -10 ஈரான் புரட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது.ஈரானில் 1979ல் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டதன் நினைவாக தலைநகர் டெஹ்ரானில் பிப்ரவரி -10 மாபெரும்பேரணி நடைபெற்றது. இதில் ஈரானை மிரட்டும் வகையில் யாரும் பேச வேண்டாம் என ஈரான் அதிபர் ஹஸன் ரௌஹானிஎச்சரிக்கை விடுத்தார்.
விளையாட்டுச் செய்திகள்:
*.வங்க தேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியகேப்டன் விராட்கோலி இரட்டை சதம் அடித்தார்.
*.பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்து 3வது வெற்றியை தழுவியது.
*.இந்திய மண்ணில் அசத்தினால் சிறந்த அணி அந்தஸ்தை பெறலாம் என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறினார்.
*.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்அமைச்சர் கோப்பைக்கான நாமக்கல்லில்நடந்த மாநில வாள்வீச்சு போட்டியில் ஆண்களுக்கான சேபர் அணிகள் பிரிவில் சென்னை பெரவள்ளுர் டான்போஸ்கோ பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்வின் நம்பியார் தங்கப்பதக்கம் வென்றார். மாநில அளவில் 5வது முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
*.விஜய ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் கட்டாக்கில்பிப்ரவரி -25 முதல் மார்ச் -6 வரை நடக்கிறது.
*.பார்வையற்றோர் டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்:
*.இங்கிலாந்து முன்னணி நிறுவனமான லிபர்டி ஹவுஸ் குழுமத்திடம் 840 கோடி ரூபாய்க்கு விற்க டாடா ஸ்டீல் இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
*.சிறு குறு தொழில் கடன் வழங்குவது, தனிநபர் கடன் அளிப்பது, வாரா கடன் குறைப்பது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என இந்தியாவின் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன் குமார் தெரிவித்தார். தற்போது இந்தியாவின் ஓவர்சீஸ் வங்கிக்கு 3394 கிளைகள் உள்ளன.
*.பொதுத் துறையைச் சேர்ந்தபாரத ஸ்டேட் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 134% அதிகரித்தது.
*.தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ61 கோடி ஆகும்.
*.வீடுகளில் சேமிக்கப்படும் பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் திட்டத்திற்காக விரைவில் நிதி ஆலோசனை குழு அமைக்கப்படும் என ‘செபி’ யின் தலைவர் யு.கே.சின்ஹாதெரிவித்துள்ளார்.
*.நியமனச் செய்திகள்
:*.*.2017-19ம் ஆண்டுக்கான சீன இந்திய ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் கரக்கட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
*.மத்திய அரசுக்கு சொந்தமானஎல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய நிர்வான இயக்குநராகஹேமந்த் பார்கவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*.இந்திய பங்கு சந்தை ஒழுங்காற்று ஆணையத்தின் (செபி) புதிய தலைவராக அஜய் தியாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.