பொது அறிவு வினா விடைகள் - இரத்தச் சுற்றோட்ட மண்டலம்
1. இதய அறைகளில் இரத்தத்தை உள்வாங்கும் அறைகள்?
ஆரிக்கிள்கள்.
2. வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையே உள்ள வால்வு?
ஈரிதழ் வால்வு (அ) மிட்ரல் வால்வு.
3. நுரையீரல் தமனி, மகாதமனி துவங்குமிடத்தில் உள்ள வால்வு?
அரைச்சந்திர வால்வு.
4. ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்களை பிரிக்கும் சவ்வு?
செப்டா.
5. இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கும்?
72 முறை.
6. இதயம் ஒரு துடிப்பிற்கு எத்தனை மி.லி இரத்தத்தை வெளித்தள்ளும்? -
80 மி.லி.
7. இதயத் துடிப்பை அளவிடப் பயன்படுவது?
- ஸ்டெதஸ்கோப்.
8. இரத்த அழுத்தம் காண உதவுவது?
ஸ்பிக்மோமோனோ மீட்டர்.
9. இதயம் சுருங்குதல் __________________ எனப்படும்.
சிஸ்டோல்
10. இதயம் விரிவடைதல் __________________ எனப்படும்.
டையஸ்டோல்
11. ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம்?
120/80 mm/Hg
12. இதய ஒலிகளான லப் மற்றும் டப் - ல் நீண்ட நேரம் ஒலிப்பது?
லப் (0.16 - 0.9 நொடிகள்).
ADS HERE !!!