காவல்துறை தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு - முதலில் என்ன படிக்க வேண்டும் ? TNUSRB TN Police Constable Exam Tips - Study Guide
மொத்த மதிப்பெண்கள் - 80
பகுதி அ - பொது அறிவு - 50 Marks
பகுதி ஆ - உளவியல் - 30 Marks
6 முதல் 10 - ம் வகுப்பு சமச்சீர் புத்தகத்தை படிக்க துவங்குங்கள். தமிழ், அறிவியல், வரலாறு புத்தகங்கள் முழுவதையும் படியுங்கள். முதலில் தமிழ், வரலாறு புத்தகங்களை படிப்பது நன்று.
பகுதி - அ
தமிழ் : செய்யுள் பகுதியில் உள்ள ஆசிரியர் பெயர், நு}ல்களின் முழுவிவரம், இலக்கண குறிப்பு மற்றும் தமிழ் முக்கிய நு}ல்கள் போன்ற பகுதிகள்.
ஆங்கிலம் : ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நு}ல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்.
அறிவியல் : அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்.
உயிரியல் : மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன் விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும்முறை, தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலை காத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம் மற்றும் சு ழ்நிலையியல்.
வேதியியல் : சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், வேதியியல் மாற்றங்கள்.
இயற்பியல் : இயக்கம், நியு ட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிளான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள், இவை அனைத்தின் இயற்கை பண்புகள்.
வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், படையெடுப்புகள், ஆண்டுகள், வேதகாலம், ஆரிய மற்றும் சங்ககாலம், மௌரியவம்சம், புத்த மற்றும் ஜைன மதம், குப்தர்கள் மற்றும் வர்த்தமானவர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள், முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்.
நவீன வரலாறு : ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை, தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.
இந்திய தேசிய இயக்கம் : இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு.
கணிதம் : 10 வகுப்பு கணிதம் படித்தால் போதும். ஆட்கள் நாட்கள், வட்டி விகிதம், விகிதங்கள், புள்ளியியல், சுருக்குக, சதவீதம், அளவியல், சராசரி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
நடப்பு நிகழ்வுகள் : தினசரி நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ள செய்தித்தாள்கள் படிப்பது மிக முக்கியமான ஒன்று. சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
பகுதி - ஆ
உளவியல் : அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். மேலும் இப்பகுதி அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும். கணிதத்தில் எண் தொடர்கள், எழுத்துக்களின் தொடர்கள், புதிர்கள், பகுப்பாய்வு பற்றிய வினாக்களை தெரிந்து கொள்ளுங்கள்.