2nd March 2018 TNPSC UPSC Bank Exam Current Affairs in Tamil
உலக செய்திகள்
1) உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுபடுத்த முடியாத அணு ஆயுத ஏவுகணையை தங்களது ராணுவத்தில் சேர்த்துள்ளதாக ரஷ்ய அதிபர் ‘புதின்’ தெரிவித்துள்ளார்
2) இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வருடம் 1.8 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
3) இலங்கையில் இறுதிப்போரில் காணாமல் போனவர்களின் நிலையை அறிய 7 பேர் அடங்கிய குழு ஒன்றை அந்நாட்டு அதிபர் சிறிசேனா உருவாக்கியுள்ளார்
4) அமெரிக்க அதிபர் டிரம்பின் வெள்ளை மாளிகையில் தகவல் தொடர்பு தலைவராக இருந்த ‘ஹோப் கிக்ஸ்’ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
5) உக்ரைனில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான சட்ட மசோதா, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேறியது
6) அமெரிக்காவில் உள்ள தனியார் விமான நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய விமானத்தை(ஸ்ட்ரடோலாஞ்ச்) உருவாக்கியுள்ளது
7) லிபரல் அரசாங்கத்தின் 2018 வரவு செலவு திட்டத்தில் கனடிய காகித நாணயத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
1) உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நாடுகள் பட்டியலில்(2017) இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா 1, 2வது இடத்தில் உள்ளது
2) வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
3) 18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டும் சிறுவர்களை ‘ஒரே ஒரு நாள்’ மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கவும், சிறுவர்களை(18 வயது நிரம்பாத) வாகன ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு ரூ.500 அபராதமும் விதிக்க ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
4) பொருளாதாரம் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மெக்ரான்’ மார்ச் 9ம் தேதி இந்தியா வர உள்ளார்
5) இரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட ‘தேசிய கீதத்துக்கு’ 100 வயதாகிவுள்ளது(28-02-1919). ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தேசிய கீதம் முதன் முறையாக ஆந்திராவில் ஒரு கல்லூரியில் பாடப்பட்டது
6) பெங்களுருவில் நடைபெற்ற சர்வதேச திரைபட விழாவில் இயக்குநர் ‘மணிரத்னத்துக்கு’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
விளையாட்டு செய்திகள்
1) ஆசிய மல்யுத்த சாம்பின்ஷிப்பில், இந்திய வீராங்கனை ‘வினேஷ் போகத்’ வெள்ளிப் பதக்கம் வென்றார்
2) பஞ்சாப் காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளராக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் ‘ஹர்மன்பிரித் கௌர்’ பொறுபேற்றார்
3) ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடர் 2018 ரஷ்யா, சோச்சி மையதானத்தில் நடைபெறவுள்ளது
4) ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளார் ‘ரஷித் கான்’(19) தேசிய அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார்
5) ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய வீரர் (ஈட்டி எறிதல்) ‘தவீந்தர் சிங்கிற்கு’ 4 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
1) 2018-2019 நிதியாண்டில் கட்டுமான துறையின் வருவாய் வளர்ச்சி அதிகரிக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது
2) அமெரிக்காவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை, அதிபர் ‘டிரம்ப்’ உயர்த்தியுள்ளார்
3) நெஸ்ட் அவே டெக்னாலஜீஸ் நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.330 கோடி(5.1 கோடி டாலர்) நிதி திரட்டி உள்ளது
4) தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தரச்சான்றிதழை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
5) இந்திய மென்பொருள் சந்தையில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் 2017ம் ஆண்டில் சுமார் 8,000 ஊழியர்களை வெளியேற்றியுள்ளது