1st March 2018 TNPSC UPSC Bank Exam Current Affairs in Tamil
உலக செய்திகள்
1) சீனாவில், மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் ‘என்(N)’ என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது
2) உலகில் காஸ்ட்லியான வீடு பட்டியலில் முதன் முறையாக இந்தியர்(முகேஷ் அம்பானி) வீடு(மதிப்பு – 1 பில்லியன் டாலர்) இடம் பெற்றுள்ளது.
3) காற்று மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, தலைநகர் ‘ரோமில்’ டீசல் கார்களை வரும் 2024ம் ஆண்டு முதல் முற்றிலும் தடை செய்ய இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது
4) நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ள மாலத்தீவு நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த சர்வதேச வழக்கறிஞர்களை அந்நாட்டு அரசு கட்டாயமாக வெளியேற்றியுள்ளது
5) அணு சக்தியால் இயங்கும் விமானத்தை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் அந்நாட்டு இராணுவத்தை உலக தரம் வாய்ந்ததாக உயர்த்த இத்தகைய விமானங்கள் தயாரிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது
6) இந்தியா மற்றும் நேபாளம் இணைந்து நடத்தம் 13வது இராணுவ கூட்டுப் பயிற்சி(சூர்ய கிரண்) பிதோரகார் பகுதியில் நடைபெறவுள்ளது
தேசிய செய்திகள்
1) சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆண்டுத் தேர்வுகளை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் உதவியுடன் எழுதலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது
2) உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்கா(2000 மெகாவாட் மின்சார உற்பத்தி) கர்நாடகாவின், பாவகடா என்ற இடத்தில் அம்மாநில முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்
3) 2018 மே மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே வினாத்தாள் இடம்பெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்
4) இந்தியாவிலேயே முதன் முறையாக பெங்களுரில், 5வழி சாலைகளை இணைக்கும் வகையில் நவீன நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அந்நகர மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
5) அரியானாவில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
1) உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது
2) டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை கேப்டன் மற்றும் பயிற்சியாளரும் பகிர்ந்துகொள்ள அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது
3) பல்கேரியா குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தங்கப் பதக்கம் மற்றும் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்
4) காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் மேரி கோம் மற்றும் விகாஸ் கிரிஷன் இடம் பெற்றுள்ளனர்
5) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரசீத் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
1) நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி டெபாசிட்டுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தை (6 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும்) உயர்த்தியுள்ளது
2) ஏப்ரல் 15ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் மூடப்படுவதாக டிராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
3) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி டிசம்பர் வரையிலான காலாண்டில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது
4) கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் ஸ்டோர்களில் இருந்து ‘சரஹா’ செயலியை நீக்கியுள்ளது
5) சமூக வலைத்தளமான டுவிட்டரில் கமென்ட், ரீடிவிட், லைக், மெசேஜ்’ என்னும் நான்கு ஐகான்கள் உள்ளது. இதில் மெசேஜ் ஐகானை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஷேர் ஐகானை டுவிட்டர் இணைத்துள்ளது