Daily Tamil Current Affairs 15th June 2017 for TNPSC Group 2A VAO
தேசிய செய்திகள் :
* பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யும் நடைமுறை நாளை
முதல் அமலுக்கு வருகிறது. நள்ளிரவுக்கு பதிலாக, காலை 6 மணிக்கு விலை
மாற்றத்தை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டதால், பெட்ரோல் விற்பனை
நிலைய உரிமையாளர்கள், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
* விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன் வட்டி மானியத்துடன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
* ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி
நடக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா மூத்த தலைவர்களில்
ஒருவரான அத்வானி தகுதியானவர் என்று கூறியுள்ளனர்.
* ஜனாதிபதி தேர்தல் முதல் நாளில் ஒரு பெண் உள்பட 6 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
* ஹரியானாவில் உள்ள மேவத் கிராமத்துக்கு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில்
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலைகள்
மற்றும் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கியால்
சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
* மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி இன்னும் ஒரு மாதம்
முடியாத நிலையில், 90 சதவீத மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச
நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் தன்வீர்சேட்
தெரிவித்துள்ளார்.
* உத்திரப் பிரதேசத்தில் பூரண மது விலக்கையும், உள்ளாட்சி
அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்த வேண்டும்
என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பீகார் முதல்வர் நிதீஷ் குமார்
வலியுறுத்தியுள்ளார்.
* தெற்காசிய செயற்கைக்கோள் மூலம் அண்டை நாடுகளுடனான இந்திய உறவு
மேம்படும் என்று இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் மயில்சாமி
அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
* இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் இ-ஆதாரை ரயிலில்
அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பன்னாட்டு செய்திகள் :
* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான
குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட்
முல்லர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டிரம்பால் பதவி
நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமியுடன், ராபர்ட்
முல்லர் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்ததால் ட்ரம்ப் அவரை பதவி
நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.
* சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களில் உயிரினம்
வாழக்கூடிய அம்சங்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கிறதா என்பதை கெப்ளர்
விண்வெளி தொலைநோக்கி கொண்டு ‘நாசா’வின் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். மேலும்
உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப்படக்கூடிய பல கிரகங்களை அவர்கள்
கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான முடிவுகளை நாசா வரும் திங்கட்கிழமை
பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.
* கவுதமாலா நாட்டில் மெக்சிகோ எல்லையில் நேற்று சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6
புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
* அமெரிக்காவின் விர்ஜினியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த எம்.பி உயிரிழந்தார் என டெனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
* ஜப்பானில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் ஸ்டைரோஃபோம்
வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வீட்டை ஒரே வாரத்தில் 3
மனிதர்கள் உருவாக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட வேண்டிய அமெரிக்கப் படையினரின்
எண்ணிக்கைகை முடிவு செய்யும் அதிகாரத்தை, அந்த நாட்டு முப்படைகளின்
தலைமையகமான பென்டகனுக்கு அதிபர் டெனால்டு டிரம்ப் அளித்துள்ளார். இதன்
மூலம் அந்த நாட்டுக்கு மேலும் ஆயிரக்கணக்கான அமெரிக்க பாதுகாப்பு
படைவீரர்கள் அனுப்புவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.
* சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாதம் பரப்பப்படுவதை தடுப்பதற்கான செயல்திட்டத்தை பிரான்ஸ_ம், பிரிட்டனும் கூட்டாக அறிவித்துள்ளன.
* ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ள்ள
பாகிஸ்தான் கடற்படை தளபதி முகமது ஷகாவுல்லா, இலங்கை அதிபர் மைத்ரிபால
சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது
இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவியதற்காக பாகிஸ்தானுக்கு
இரு தலைவர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள் :
* சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2வது அரையிறுதியில்
இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.சாம்பியன்ஸ் கோப்பை
கிரிக்கெட்டின் 2வது அரையிறுதியில் இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று
மோதுகின்றன.
* உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று போட்டி லண்டனில் இன்று
தொடங்குகிறது. இதன் லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள்
மோதுகின்றன.
* 5வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் ஜூலை 28ம் தேதி முதல்
அக்டோபர் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் புதிய அணிகளாக தமிழ்நாடு,
ஹரியானா, குஜராத், உத்திரப் பிரதேசம் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழக அணியின் பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது.
* 2020ம் ஆண்டுக்கான டோக்கியோ(ஜப்பான்) ஒலிம்பிக் போட்டியில் கராத்தே போட்டி சேர்க்கப்பட்டுள்ளது.
* இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில்
நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம்
ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் இந்தோனேசிய வீரர் அந்தோனி சினிசுகாவை
தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
* இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் தொழில்நுட்ப கமிட்டி
உறுப்பினராக சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்க செயலாளரும்,
பயிற்சியாளருமான கோல்டு ராஜேந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார சங்கக்காரா இங்க்லிஷ்
கவுன்ட்டி அணியான சர்ரேவுக்காக ஆடி சதமடித்தார். இதன் மூலம் முதல் தர
மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அவர் மொத்தம் 100 சதங்களை எட்டி
சாதனை படைத்துள்ளார்.
* நம்முடைய லட்சியத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதை பிரெஞ்சு
ஓபன் வெற்றி கற்று தந்திருக்கிறது என்று இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன்
போபண்ணா தெரிவித்துள்ளார்.
* விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு முந்தைய பயிற்சி போட்டியான
பர்மிங்காம் டபிள்யூடிஏ போட்டியிலிருந்து செக்.குடியரசின் கரோலினா
பிளிஸ்கோவா விலகியுள்ளார்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :
* இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில்
அமெரிக்க டாலருக்க எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20காசுகள் உயர்ந்து
ரூ.64.44 காசுகளாக உள்ளது.இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி
சந்தையில் அமெரிக்க டாலருக்க எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20காசுகள்
உயர்ந்து ரூ.64.44 காசுகளாக உள்ளது.
* இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 18 புள்ளிகள்
உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
18.21 புள்ளிகள் உயர்ந்து 31174.12 புள்ளிகளாக உள்ளது.
* வங்கிகளின் வராக்கடன் பிரச்சனை அதிகரிக்க 12 வங்கி கணக்குகள் தான் காரணம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
* மொத்த விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 2.17 சதவீதமாக குறைந்துள்ளது.
* ஏப்ரல் மாதத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 119.88 கோடியாக
இருந்தாலும் வளர்ச்சி தொடர்ந்து மிகவும் குறைவாகவே இருப்பதாக தொலைத்தொடர்பு
ஒழுங்கு முறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது.
* அரசாங்கம் டிஜிட்டல் துறைக்கு செய்யும் செலவுகளை உயர்த்த
வேண்டும். அதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உள்நாட்டிலேயே போதுமான
சந்தை இருப்பதால் வெளிநாட்டு சந்தையை நம்பி இருக்க வேண்டிய தேவை குறையும்
என இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பாலகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.
* கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 81 உயர் அதிகாரிகள்
நீக்கப்பட்டிருப்பதாக பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
* இன்டெல் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை
விரிவுபடுத்துவதற்காக இந்தியாவில் ரூ.1100 கோடியை முதலீடு செய்ய
திட்டமிட்டுள்ளது. மேலும் இது போன்ற முதலீடுகள் அதிக வேலைவாய்ப்புகளை
உருவாக்குவது மட்டுமல்லாமல் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையையும
பலப்படுத்தும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.