Failing to Prepare = Prepare to Fail
Written By: Mr. Ajmal Khan
ஒரு ஊருக்கு ஒரு முனிவர் வந்தார்...
அவரிடம் மக்கள் எல்லாம் தங்களின் குறைகளைக் கூறி முறை யிட்டனர்.. அந்த ஊரில் நீண்ட காலமாக மழை வரவில்லை என்றும் தங்களின் குடும்பங்கள் மிகுந்த வறுமையில் இருப்பதாகவும் நீங்கள் தான் ஏதேனும் ஒரு வழி கூற வேண்டும் என்று அந்த ஊரில் உள்ள அனைவரும் அவரிடம் கதறினர்...
சற்று நேரம் தியானத்தில் இருந்து விட்டு விழித்த முனிவர், "இன்றிலிருந்து ஒன்பதாம் நாள் உங்களின் தலைக்கு மேல் ஒரு சொர்க்கப் பறவை ஒன்று பறக்கும்.. அது விரைவாக பறக்கும் தன்மை உடையது.. அதை நீங்கள் பிடித்துவிட்டால்.. அது உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும்" என்று கூறிவிட்டு சென்று விட்டார்..
முனிவர் சென்றவுடன் சிலர் அவரை நம்பாமல்... தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டனர்... சிலர் அந்த பறவையின் வரவிற்காக காத்துக் கொண்டு இருந்தனர்... ஆனால்... ஒருவன் மட்டும் காற்றில் அந்தப் பறவை பறப்பதாக நினைத்துக் கொண்டு தவ்வி தவ்வி அதை பிடிப்பது போல் முயற்சி செய்து கெண்டே இருந்தான்...
ஊரில் உள்ள அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தனர்... என்றோ வரப் போகும் பறவையை இன்றைக்கு பிடிப்பது போல் பாசாங்கு செய்ததை... அவனது முட்டாள்தனம் என நினைத்து அவனை கிண்டல் செய்தனர்.. ஆனால்... அவற்றை எல்லாம் காதில் வாங்காமல் ... ஒரு பைத்தியக்காரனைப் போல்... இல்லாத பறவையை விரட்டி விரட்டி பிடித்துக் கொண்டு இருந்தான்..
சாமியார் கூறிய அந்த பறவை வரும் நாள் வந்தது... அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தனர்,.. திடீரென.. அந்த பறவை மிகுந்த வேகத்தில் பறந்து வந்தது.. அதனைக் கண்ட அனைவரும் அதை பிடிக்க முயற்சி செய்தனர்.. ஆனால் அவர்களால் பிடிக்க முடியவில்லை,..
ஆனால்... ஊர் மக்கள் கிண்டல் செய்த அந்த ஒருவன் மட்டும் அதை பிடித்துவிட்டான்... மக்களுக்கெல்லாம் சந்தோஷம் கலந்த ஆச்சரியம்... "உன்னால் மட்டும் எப்படி பிடிக்க முடிந்தது?" என அவனிடம் கேட்டனர்... அதற்கு அவன் சொன்னான் "நீங்கள் எல்லோரும் பறவை வந்த பிறகு தான் அதை பிடிக்க முயற்சி செய்தீர்கள்.. ஆனால்.. நானோ... பறவை வருவதற்கு முன்பிருந்தே அதை பிடிக்க முயற்சி செய்தேன்...
எந்த விஷயத்திலும் வெற்றி பெற வேண்டுமானால்... அந்த சூழ்நிலை வந்த பிறகு அதை செய்ய தயாராவதை விட... அதற்கு முன்பே.. நாம் நம்மை தயாராக வைத்துக் கொண்டால்... வெற்றி நமக்கே உரியதாக இருக்கும்"......