TN TET ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்
நூல்களும், நூல்களின் ஆசிரியர்களும்
1. 'காவடி சிந்து" எனும் பாடலைப் பாடியவர் - அண்ணாமலை ரெட்டியார்
2. 'தேசிய கீதத்தை" எழுதியவர் - ரவீந்திரநாத் தாகூர்
3. 'செந்தமிழ்நாடு" எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் - பாரதியார்
4. 'ஜீவகாருண்ய ஒழுக்கத்தை" பாடியவர் - இராமலிங்க அடிகளார்
5. 'பாரதத்தாய் கவிதையை" எழுதியவர் - அசலாம்பிகை அம்மையார்
6. 'முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழைப்" பாடியவர் - குமரகுருபரர்
7. 'கம்பராமாயணத்தை" இயற்றியவர் - கம்பர்
8. 'பாப்பா பாட்டு" எனும் பாடலைப் பாடியவர் - பாரதி
9. 'பராபரக்கண்ணி" எனும் நு}லை எழுதியவர் - தாயுமானவர்
10. 'எங்கள் தமிழ்" எனும் கவிதையைப் பாடியவர் - பாரதிதாசன்
11. 'தமிழ்த்தாய் வாழ்த்துப்" பாடலைப் பாடியவர் - மனோன்மணியம் சுந்தரனார்
12. 'சடகோபரந்தாதி" எனும் நு}லை எழுதியவர் - கம்பர்
13. 'இசையமுது" பாடலை எழுதியவர் - பாரதிதாசன்
14. 'புதிய விடியல்கள்" எனும் பாடலைப் பாடியவர் - தாராபாரதி
15. மரமும் பழைய குடையும் எனும் பாடலைப் பாடியவர் - அழகிய சொக்கநாதப்புலவர்
16. வேளாண் வேதம் எனப்படும் நூல் எது? - நாலடியார்
17. நான்மணிக்கடிகை என்ற நூலினை இயற்றியவர் யார்? - விளம்பி நாகனார்
18. 'முதல் இலக்கணம்" எனப்படும் நூல் - அகத்தியம்
19. "இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்" எனக் கூறும் நூல் எது? - நான்மணிக்கடிகை
20. கடிகை என்பதன் பொருள் என்ன? - அணிகலன்
21. 'தமிழர் வேதம்" என்ற சிறப்பிற்குரிய நூல் - திருமந்திரம்
22. ஓதலினை (கற்றல்) விட சிறந்தது எது? - ஒழுக்கமுடைமை
23. இளமையில் சிறந்தது எது? - மெய்பிணி இன்மை (நோய் இல்லாமை)
24. 'புலவராற்றுப்படை" என்று அழைக்கப்படும் நூல் - திருமுறுகாற்றுப்படை
25. 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று பாடியவர் யார்? - பாவேந்தர் பாரதிதாசன்
26. 'நாடகக் காப்பியம்" என்றழைக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்
27. 'நெடுந்தொகை" என்று அழைக்கப்படும் நூல் - அகநானூறு
28. 'தெய்வ நூல் " என்று போற்றப்பட்ட நூல் - திருக்குறள்
29. 'பஞ்ச சிறுகாப்பியம்" என்ற சிறப்பிற்குரிய நூல் - ஐஞ்சிறுகாப்பியம்
30. 'குறவஞ்சிப்பாட்டு" என்று அழைக்கப்படும் நூல் - குற்றாலக் குறவஞ்சி