TNPSC Tamil Current Affairs - TNUSRB Police Constable Exam Tamil Current Affairs February 2017 - We Shine Academy Current Affairs
தேசிய செய்திகள்:
*.பிரதமர் மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் மந்திரிகள் தங்கள் 3 மாதபயண விவரங்கள் அறிக்கையை பிப்ரவரி -13க்குள் சமர்ப்பிக்க மோடி உத்தரவிட்டுள்ளார். இதன் ஒருங்கிணைப்பாளராக கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டுத்துறை மந்திரிநரேந்திரசிங் தோமரை நியமித்தார்.
*.நமது நாட்டில் 18 வயதில் வாக்குரிமை வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு வாக்குரிமை தேர்தல் முறை பற்றிய கல்வி அறிவை வளர்க்க 15முதல் 17 வயதுள்ள மாணவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் தேர்தல்முறை கல்வியை சேர்க்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரிபிரகாஷ் ஜவடேகருக்கு தலைமை தேர்தல் ஆணையம் நசீம்ஜைதி கடிதம் எழுதினார்.
*.மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிக்கைகளும் தகவல்களும் வெளியாகும் இணையதள பக்கம்மர்மநபர்கள் சிலரால் நேற்று திடீரென முடக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மத்திய மாநில அரசுகளின் 700 இணையதள பக்கங்கள்மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக டெல்லியில் தகவல் வெளியாகியுள்ளது.
*.தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கும் அரசை நியமிக்கும் விவகாரத்தில்குறிப்பிட்ட காலத்துக்குள் ஆளுநர் வித்யாசாகர்ராவ் முடிவெடுக்க வேண்டும் நீண்ட காலத்துக்கு காலதாமதம் செய்ய முடியாதுஎன முன்னாள் அட்டார்னி ஜெனரல் சொலி சொராப்ஜி கூறியுள்ளார்.
*.ஹெச்-1பி விசாவுக்கு அமெரிக்க அரசு கட்டுப்பாடுகள் விதிப்பதால் ஏற்படக்கூடியபாதிப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து கேட்டுள்ளது.
*.கள்ளரூபாய் நோட்டுக்களை கண்டுபிடிப்பதற்கான பயிற்சியை தங்களது விரர்களுக்கு அளிப்பது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மத்திய ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
*.கேரள மாநிலம் மூணார் அருகே சிருஷ்டி நல்வாழ்வுசங்கம் சார்பில் ‘அதுல்யா’ எனப்படும் கைகளால் தயாரிக்கப்படும் காகித உற்பத்தி பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு யானையின் சாணத்திலிருந்து காகிதத்தை உற்பத்தி செய்கின்றனர்.
*.ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்ரயில்களில் ஏறுவதை தடுப்பதற்காகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பன்னாட்டு செய்திகள்:
*.அமெரிக்க அதிபராக டிரம்ப்பதவியேற்ற பிறகு முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. இதற்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது.
*.பிரிட்டன் அரசி எலிசபெத்தின் டுவிட்டர் சமூக வலைத்தளக் கணக்கைப் பராமரிக்க ஆண்டுக்கு 30ஆயிரம் பவுண்ட் (சுமார் ரூ.30 லட்சம்) ஊதியத்துடன் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
*.சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ் இயக்கத்தினர் மீது துருக்கி படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
*.சுவிட்சர்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள குடியுரிமை கட்டுப்பாட்டினை தளர்த்துவது தொடர்பாக நேற்று கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்தது.
*.பாகிஸ்தான் பாராளுமன்ற செனட் சபையின் துணைத்தலைவர் மவுலானா அப்துல்கபூர் iதெரிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
*.கிரீஸ் நாட்டில் தெசலோனிக்கு நகரில் இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காத ஒரு குண்டை செயலிழக்க செய்வதற்காக 2கிமீ சுற்றளவில் 75 ஆயிரம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது. இந்த வெடிகுண்டு 500 பவுண்ட் எடை கொண்டது.
விளையாட்டுச் செய்திகள்:
*.பார்வையற்றோர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
*.ஐதராபாத் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேசஅணிக்கு 459 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ள இந்தியா வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
*.45வது டெஸ்டில் பங்கேற்றுள்ள அஸ்வின் 2வது இன்னிங்சில் எடுத்த2 விக்கெட்டுகளையும் சேர்த்து இதுவரை மொத்தம் 252 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமிக்க வைத்துள்ளார்.
*.சையது முஷ்டக் அலி கோப்பைக்கான மண்டலங்கள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் வடக்கு மண்டல அணியைத் தோற்கடித்தது.
*.பிரான்சின் மான்ட் பெல்லியர் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி உலக டூர் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியுடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்:
*.இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் பிராண்டகளில் ஒன்றை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் பிரெஞ்சு கார் உற்பத்தி நிறுவனமான பர்ஷோவிடம் சுமார் 12 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்தது. 1990களின் நடுப்பகுதியில் இந்தியாவில் பொருளாதாரக் கொள்கைகள் தளர்த்தப்பட்ட போது நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்களில் பர்ஷோவும் ஒன்று.
*.நிலையான இறக்குமதி கொள்கையில் நடப்பு ஆண்டில் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை அமோகமாக இருக்கும் என லம்போர்கினிநிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம், ஹராகேன் ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன்விலை ரூ 3.45 கோடியாகும்.
*.இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி விஷால் சிக்காவின் சம்பளம் மற்றும் இரண்டு உயரதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியபோது அவர்களுக்கு அதிகளவில் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்திற்கும் இயக்குநர் குழுமத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
நியமனச் செய்திகள்:
*.தேசிய பங்குச்சந்தையின் புதிய தலைவரான விக்ரம் லிமாயேவுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடி ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஐ.டி.எப்.சியில் தலைமைப் பொறுப்பில் இருந்த விக்ரம் லிமாயேவை தேசிய பங்குச் சந்தைக்கு புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
TNPSC Tamil Current Affairs - TNUSRB Police Constable Exam Tamil Current Affairs February 2017 - We Shine Academy Current Affairs