நினைவாற்றலைக் கூர்மைப்படுத்த எளிய பயிற்சிகள்
1.முதலில் வசிதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். தரையிலோ அல்லது
நாற்காலியிலோ எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம்.
2. பிறகு மெல்ல கண்களை மூடிக் கொள்ளுங்கள். அவசரப் படாமல் மிகவும்
இயல்பாகச் செய்யுங்கள்.
3. இப்போது காற்றை மூக்கின் வழியாக உட்சுவாசித்து பிறகு வாய்வழியாக மெல்ல வெளிவிடுங்கள். இப்படி நான்கைந்து முறை செய்யுங்கள். அப்படி காற்றை வெளிவிடும் போது அமைதி, அமைதி, அமைதி, என்றோ அல்லது Relax, Relax, Relax என்றோ உள்ளத்துள்ளேயே உச்சரியுங்கள்.
4.தற்போது உங்கள் காதுகளை நன்கு தீட்டிக்கொண்டு வீட்டிற்கு வெளியிலிருந்து வரும் ஓசையைக் கவனியுங்கள் (வாகனங்கள் உண்டாக்கும், ஒலி, மோட்டார் உண்டாக்கும் ஓசைகள்). ஆனால், வீட்டில் அம்மா சமையலறையில் உருட்டுவதால் எழும் ஒலிகளில் கவனம் செலுத்தக் கூடாது. ஆனால் வீட்டில் அம்மா சமையலறையில் உருட்டுவதால் எழும் ஒலிகளில் கவனம் செலுத்தக் கூடாது. ஆனால் வீட்டில் காற்றாடி ஓடும் ( Fan ) சத்தம் போன்றவற்றைக் கேட்கலாம்.
5. அடுத்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். காற்று உட்சென்று வெளியேறும் ஒலியைக் கூர்ந்து கவனிங்கள்.
6. இப்போது உங்கள் மனத்தில் எழும் எண்ணங்களைக் கவனியுங்கள். வருகிற
எண்ணங்களை கட்டுப்படுத்த நினைக்காதீர்கள். உங்கள் அடிமனதில் அழுந்திக்
கிடந்த தீய எண்ணங்களும், நிறை வேறாத ஆசைகளும் இன்னும் பலவும் பறந்து பறந்து வருவதைக் கவனிக்கலாம். ஓரிரு நிமிடம் எண்ணக்குதிரைகளை ஓடவிடுங்கள்.
7. மீண்டும் சுவாசத்தைக் கவனியுங்கள். அடுத்து புற ஓசைகளைக் கவனியுங்கள். பிறகு மெல்ல இமைகளைத் திறந்து பாருங்கள்.
இந்தப் பயிற்சிக்கு 5 நிமிடம் போதுமானது. தினமும் தொடர்ந்து இந்தப்
பயிற்சியைச் செய்யுங்கள், யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைச்
செய்யலாம். எப்போது எல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாம்.
அயர்வு மேலாண்மையில் ( Stress management ) இது ஒரு முக்கியப்
பயிற்சியாகும். ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் எல்லோரும் பல்வேறு மன
அழுத்தங்களுக்கு (Tension) ஆளாகிறோம். அவற்றிலிருந்து விடுபட மிகசிறந்த
மருந்தாக இந்தப் பயிற்சி உங்களுக்குப் பயன்படும். அலுவலகத்தில் பணி
புரிகிறவர்கள். அதிகமாக கோபப்படும் இயல்புடையவர்கள், மன அமைதியின்றி இருப்பவர்களுக்கு எல்லாம் மருந்து வாங்கி சாப்பிட்டாலும் கிடைக்காத உடல்நலம் இந்தப் பயிற்சியில் கிடைக்கும். மனம் சமநிலைக்கும் வரும்.
ADS HERE !!!