இந்த கேள்வியை பொறியாளர்களிடம் கேட்டால் அவர்கள் விரிவுரையாளர்கள், HOD மற்றும் கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சொல்வார்கள். இதே கேள்வியை விரிவுரையாளர்கள், HOD மற்றும் கல்லூரி நிர்வாகம் பக்கம் திருப்பினால் அவர்கள் மாணவர்கள் மீது குற்றம் சொல்வார்கள். இதே கேள்வியை பயிற்சி நிறுவனங்களிடம் கேட்டால், அவர்கள் மாணவர்கள் விரிவுரையாளர்கள், HOD மற்றும் கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சொல்வார்கள்.
இதற்கு யார் பொறுப்பு . ? ? ?
என்னுடைய பார்வையில், எல்லாருமே இதற்கு பொறுப்பு தான். ஆனால் 90% பொறுப்பு பொறியாளர்களிடம் தான் உள்ளது.
காரணம் என்ன . . ? ? ?
- அவர்களுடைய கல்லூரி நாட்களில், பிராண்டட் ஆடைகள் அணிவதில் தங்களுடைய ஆர்வத்தை செலுத்துவார்கள். ஆனால் அதே ஆர்வமும், ஈடுபாடும் வகுப்புகளுக்கு செல்வதில் இல்லை.
- Facebook மற்றும் Whatsapp போன்ற தேவையில்லாத விஷயங்களில் தங்களுடைய நேரத்தை செலவிட நினைப்பவர்கள், தொழில்நுட்ப கட்டுரைகள் மற்றும் தங்கள் கல்லூரி பாடங்களை படிப்பதில் சில நிமிடங்கள் கூட செலவழிக்க மாட்டார்கள்.
பெரும்பாலான மாணவர்களின் பதில்:
- எங்களுக்கு பாடம் கற்பிக்க சிறந்த விரிவுரையாளர்கள் மற்றம் ஆய்வகத்தில் வழிகாட்ட சிறந்த் ஆசிரியர்கள் இல்லை.
தீர்வுகள்:
- நீங்கள் ஏன் விரிவுரையாளர்கள் மற்றம் ஆசிரியர்களை ஏன் சார்ந்து இருக்க வேண்டும், இணையத்தில் குறிப்புகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
பயனுள்ள இணையதளங்கள்:
2. Facebook மற்றும் Whatsapp போன்றவற்றில் அதிக நேரம் செலவிடாதிர்கள்.
3. வேலைக்காக படிக்க வேண்டாம், உங்கள் அறிவை வளர்க்க படியுங்கள்.
4. கல்லூரி பாடங்களை படிப்பதனுடன், C, C++, .Net, JAVA, AutoCad போன்றவற்றயும் கற்றுக்கொள்ளுங்கள்.
5. உங்கள் திறமைக்கான வேலை கண்டிப்பாக கிடைக்கும்.
Share this article and help the Students . .
Thanks,
JPR Notes Team