இலட்சியத்தை அடைய விரும்புவோரிடம் இருக்கும் ஏழு குணங்கள்
உங்களது இலட்சியத்தை அடைய வேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் நெப்போலியன் ஹில். அவை,
1. தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்.
2. கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்.
3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்கு் படுத்தி, அமைக்கும் குணம்.
4. சிந்தனையைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்திக் கவனமுடன் செயல்படுவது.
5. நேரத்தையும், பணத்தையும் திட்டமிட்டுச் செலவு செய்வது.
6. எப்போதும் சுறுசுறுப்புடனும், ஊக்கத்துடனும் மனதை வைத்திருப்பது.
7. இலட்சியத்தை அடையும் வரை ஒவ்வொரு நிலையிலும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளல்.