TN Police Constable Exam General Tamil Notes - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

TN Police Constable Exam General Tamil Notes - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

1) சிலம்பு என்று அடைமொழி சேர்ந்து அழைக்கப்படும் நூல் எது?

- சிலப்பதிகாரம்

2) பாணாறு எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

பெரும்பாணாற்றுப்படை

3) மூவேந்தர் காப்பியம் எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

- சிலப்பதிகாரம்

4) திணை இலக்கியம் என்று அழைக்கப் பெறுவது?

- சங்க இலக்கியம்

5) நல்ல என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

- குறுந்தொகை

6) ஓங்கு எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

- பரிபாடல்

7) ஒத்த எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

- பதிற்றுப்பத்து

8) முதல் இலக்கணம் எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

- அகத்தியம்

9) சேரர் வரலாற்றுப் பெட்டகம் எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் ?

- பதிற்றுப்பத்து

10) நாலடி நானு}று என்று குறிப்பிடப்படும் நூல்?

- நாலடியார்

11) இரண்டு எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

- திருக்குறள்

12) அகம் என்று குறிப்பிடப்படும் நூல்?

- அகநானூறு

13) மணநூல் எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

- சீவகசிந்தாமணி

14) வஞ்சிநெடும் பாட்டு எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

- பட்டினப்பாலை

15) கோல் குறிஞ்சி என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

- குறிஞ்சிப்பாட்டு

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .