3rd March 2018 TNPSC UPSC Bank Exam Current Affairs in Tamil

3rd March 2018 TNPSC UPSC Bank Exam Current Affairs in Tamil

உலக செய்திகள்

1) 2018ம் ஆண்டு சர்வதேச அளவில் உள்ள பில்லியனர்கள் பட்டியலில் நார்வையைச் சேர்ந்த ‘அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன்’ உலகில் இளமையான கோடிஸ்வரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்

2) புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்த ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில்(அமெரிக்கா) இணை பேராசிரியரான நவீனுக்கு(இந்தியா) ரூ.7 கோடியே 75 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது

3) எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணைகளும் வேலைவாய்ப்பு கோருவதை தடை செய்யும் முடிவை அமெரிக்காவின் குடியேற்றத்துறை தற்போது ஒத்திவைத்துள்ளது

4) உலகின் பல்வேறு நாடுகளின் பணம் கிடைக்கும் ஒரே பண சந்தை ‘சோமாலியா’ நாட்டில் உள்ளது

தேசிய செய்திகள்

1) கர்நாடகாவில் பெண் தொழிலதிபர்கள் சுதந்திரமாக செயல்பட, அவர்களுக்கு தனியாக ‘தொழிற்பூங்காவை’ முதல்வர் ‘சித்தராமையா’ நேற்று தொடங்கி வைத்தார்

2) ‘நிர்பயா நிதியம்’ மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ரூ.2,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அனுமதி வழங்கியுள்ளது

3) ஆன்லைன் மூலம் (IRCTC) இரயில் டிக்கெட் முன் பதிவு செய்யப்படும் போது அதற்கான MDR எனப்படும் வணிக கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

4) இந்தியா – வியட்நாம் இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட 12 துறைகளில் புரிந்துணைர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

5) 24 மணி நேர கல்வி வழிகாட்டி உதவி மையம்(ஹெல்ப்லைன்) முதல் அமைச்சர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ தலைமையில் டி.பி.ஐ வளாகத்தில் தொடங்கப்பட்டது

விளையாட்டு செய்திகள் 

1) ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை ‘நவ்ஜாத் கவுர்’ தங்கப்பதக்கம் வென்றார்

2) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜுனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவருமான ‘வெங்கடேஷ் பிரசாத்’ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

3) இந்திய பாரா நீச்சல் வீரர் ‘பிரசாந்த கர்மாகருக்கு’, இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி 3 ஆண்டுகள், நீச்சல் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது

4) துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ‘பயஸ்’ ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

1) பூமியை விட மூன்று மடங்கு அதிக தண்ணீர் கொண்ட கிரகத்தை(டபுள்யூஏஎஸ்பி-39பி) நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

2) அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹாலியர் மற்றும் டாங்’ ஆகிய இருவர் இணைந்து, குறுஞ்செய்தி மற்றும் பேச மட்டுமே பயன்படும் செல்போனை வடிவமைத்துள்ளனர்

முக்கிய தினங்கள்

மார்ச் 03 – தேசிய பாதுகாப்பு தினம்

வர்த்தக செய்திகள்

1) பொதுத் துறை வங்கிகளின் செலவுகளைக் குறைத்தல் மற்றும் வங்கி சேவையினை மெருகேற்ற 35 வெளிநாட்டுச் செயல்பாடுகளை மூட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

2) பொதுத் துறையைச் சேர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனம் 45 சதவீத இடைக்கால ஈவுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது

3) ஸ்மார்ட்வாட்ச் விற்பனை பிரிவில் ஆப்பிள் நிறுவனம் போட்டியின்றி முதலிடத்தில் உள்ளது

4) உலகின் நம்பர் ஒன் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனரான ‘பில்கேட்ஸ்’ 3வது இடத்தில் உள்ளார்

5) ‘நிப்பான் ஸ்டீல் அண்ட் சுமிட்டோமோ மெட்டல் கார்ப்பரேஷனுடன்’(என்எஸ்எஸ்எம்சி) இணைந்து ‘எஸ்ஸார் ஸ்டீல்’ நிறுவனத்தை வாங்க இருப்பதாக ‘ஆர்சிலர்மிட்டல்’ நிறுவனம் அறிவித்துள்ளது

6) இந்தியாவின் மிகப் பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான ‘பிளிப்கார்ட்’ தனது கிளை நிறுவனமான ‘மின்திரா மற்றும் ஜபாங்’நிறுவனங்களில் ரூ.1,100 கோடி முதலீடு செய்துள்ளது 

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .