16th May 2017 Tamil Current Affairs TNPSC Group 2A TN Police TNPSC VAO

16th May 2017 Tamil Current Affairs TN Police TNPSC VAO Group IIA
by We Shine Academy

தேசிய செய்திகள்:

1) ‘ரேன்சம்வேர்’ என்று அழைக்கப்படும் வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் சில இடங்களில் இந்த இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக, ஆந்திர காவல் துறைக்கு சொந்தமான 25 சதவீத கணினிகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2) ஒவ்வொரு மாநிலத்துக்கும் ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக, மாநிலங்கள் கோரும் திட்டங்களை செயல்படுத்த முடிவதில்லை. இதனால் ரயில்வே – தமிழக அரசு இடையே சிக்கல் நீடித்து வருகிறது.

3) பிரணாப் முகர்ஜியை 2வது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்துவது சிறப்பான முடிவாக இருக்கும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

4) மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழகம் (ஆர்.இ.சி) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) ரூ.60 ஆயிரத்து 63 கோடியும், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்துக்கு (டான்டிரான்ஸ்கோ) ரூ.25 ஆயிரத்து 660 கோடி நிதி உதவி வழங்கி இருப்பதாகவும், இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

5) நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக, நீட் எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு கடந்த 7ம் தேதி நடத்தப்பட்டது. இதில் இந்தி, ஆங்கிலம் மற்றும் 10 மொழிகளில் கேள்வித்தாள்கள் இருந்தன. இந்நிலையில், இந்தி, ஆங்கிலம் கேள்வித்தாளை விட மாநில மொழி கேள்வித்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர். இதற்கு மத்திய அரசு சி.பி.எஸ்.இ யிடம் விளக்கம் கேட்டுள்ளது.

6) ரூ.1000 கோடி நில மோசடி வழக்கில், 22 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

7) உத்திரப் பிரதேச சட்டப்பேரவையில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

8) ஒடிஸாவின் முன்னாள் நிதியமைச்சர் பிரதீப் அமித், மீண்டும் அந்த மாநில சட்டப் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பன்னாட்டு செய்திகள் :

1) அமெரிக்கா, தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் புதிய ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

2) இரு நாடுகளுக்கு இடையே நிலைமை சுமுகமாக இருந்தால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று வடகொரியா கூறியுள்ளது.

3) ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

4) ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அமெரிக்கா சேகரித்த இரகசிய உளவுத் தகவல்களை அதிபர் டிரம்ப் வெளியிட்டார் என்று அமெரிக்காவின் பிரபல நாளேடான வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையில் வெளிவந்துள்ளது.

5) புவி வெப்பமடைதல் பற்றிய பருவகால மாற்றம் குறித்த ஐநா அமைப்பிற்கு ஓவாய்ஸ் சர்மாட் எனும் 57 வயது மூத்த அதிகாரி ஒருவரை செயலர் குட்டரேஸ் நியமித்துள்ளார்.

6) பல காலமாக இருந்து வரும் வழக்கத்திலிருந்து தனது கட்சியிலிருந்து பிரதமரை நியமிக்காமல் வலதுசாரி ஒருவரை பிரதமராக பிரஞ்சு அதிபர் மெக்ரான் நியமித்துள்ளார்.

7) அமெரிக்க நாட்டின் சிறந்த அழகியை தேர்வு செய்யும் ‘மிஸ் அமெரிக்கா’ போட்டி நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதில் வாஷிங்டன் மாகாணத்தின் கொலம்பியா மாவட்டத்தை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி காரா மெக்கல்லோ மிஸ் அமெரிக்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8) வானாகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் பாதிக்கும் என்று சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள் :

1) இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக ரிஷப் பந்த் திகழ்வார் என ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

2) கோவில்பட்டியில் கே.ஆர் மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9வது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்று சாம்பின் பட்டத்தை வென்றது.

3) தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இந்தியா, அயர்லாந்து ஆகிய 4 நாடுகள் இடையிலான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தொடக்க விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்து உலக சாதனையை படைத்தது.

4) பாகிஸ்தான் – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டோமினிகாவில் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

5) ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. இது ரியல் மாட்ரிட் அணிக்கு 27வது வெற்றியாகும்.

6) மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

7) புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள வேம்பங்குடியில் நடைபெற்ற இருபாலருக்கான மாநில வாலிபால் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை இந்தியன் வங்கியும், மகளிர் பிரிவில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியும் சாம்பியன் பட்டம் வென்றன.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

1) மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆபரண தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் இந்திய ஏற்றுமதி நடப்பாண்டில் 4200 கோடி டாலர் அளவுக்கு உயரும் என்று இந்திய ஆபரண நகை ஏற்றுமதியார்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

2) வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 30582 புள்ளிகளாக உள்ளது. நிப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 9512 புள்ளிகளாக உள்ளது.

3) இன்று வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 134 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 181.36 புள்ளிகள் உயர்ந்து 30503.48 புள்ளிகளாக உள்ளது.

4) இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.64.11 காசுகளாக உள்ளது.

5) தமிழகத்தில் விளைச்சலே இல்லாத போதும், இந்த ஆண்டு தேசிய அளவில் அபாரமான மகசூல் இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.

6) நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு நிதி உதவி வழங்க, 1000 கோடியில் நிர்பயா நிதியம் கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கியது. ஒவ்வொரு ஆண்டும் நிர்பயா நிதியத்துக்கு 1000 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், நிர்பயா நிதி உதவியுடன், 983 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

7) சென்ற ஏப்ரல் மாதத்தில் ஜவுளி, பொறியியல் சாதனங்கள், ஆபரணங்கள், பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதி குறிப்பிடும்படியான அளவில் அதிகரித்தது. அதன் காரணமாக, நாட்டின் ஏற்றுமதி 19.77மூ அதிகரித்து 2463 கோடி டாலரை எட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .