TNPSC Group 4 சான்றிதழ் சரிப்பார்ப்பில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது ஏன் ?

சான்றிதழ் சரிப்பார்ப்பில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக இருக்கும் முக்கிய 08 நிகழ்வுகள்:

1. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையைப் பயன்படுத்தி இருந்தால்,

2. நிரந்தரப் பதிவில் 10ம் வகுப்பு பதிவு எண்ணை (Reg. number) தவறாக கொடுத்து இருந்தால் (நன்றாக கவனிக்க: பதிவு எண், சான்றிதழ் எண் (Certificate number ) அல்ல)

3. சாதி, மதம் மற்றும் சாதி உள் பிரிவு தொடர்பான தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க போதிய அவகாசம் கொடுத்தும் சமர்ப்பிக்க வில்லை என்றால்

4. சான்றிதழ் சரி பார்ப்பிற்கு வரவில்லை என்றால்.

5. தேவையான கல்வி மற்றும் தொழில் நுட்பத் தகுதியை தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பே (Before notification) முடிக்காமல், அறிவிப்பு க்கு பின் முடித்து இருந்தால் (After notification).

7. கல்வித் தகுதியில் தவறான தகவல்கள் மற்றும் போலியான சான்றிதழ்களை அளிக்கும் பொழுது.

8. தமிழ் வழியில் படித்ததாக விண்ணப்பித்து விட்டு பின்னர் அதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருந்தால்.
இது தவிர விண்ணப்பம் மற்றும் சான்றிதழில் உள்ள எழுத்துப் பிழை, மற்றும் எண் பிழைகளுக்கு எல்லாம் கடிதம் எழுதிக் கேட்பார்கள். அதனால் பெரிய பாதிப்பு இல்லை.

Credit: ஐயாசாமி, அஜி

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .