Inspirational Article for TET 2017 Aspirants

இலக்கு : வெற்றி மட்டுமே...

"ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு"

காத்திருந்த இலக்கு விரலருகே...
போட்டி களம் தயார்
உடன் போட்டியாளரும் தயார்.
சிறு வித்தியாசம் சிலரல்ல லட்சத்தினர்...
துவங்கிய பயணம் சரித்திரம் படைக்கட்டும்.

"டார்வின் கோட்பாடு...
தப்பி பிழைக்க கற்று கொள்பவையே உயிர்வாழ்கிறது..."

இது இன்றைய போட்டி களத்தில் நிதர்சன உண்மை.
நெஞ்சம் துணியட்டும்
உழைப்பு பெருகட்டும்
கேள்வி தாள் பாட திட்டம் தவிர எங்கு கேட்டு விட போகிறான்
வேள்வியாய் தொடரும் காட்டுத் தீ எழுச்சி தனை மட்டும் மனம் விட்டு அகற்றாதே
வழி தயார் நடப்பது கடினம் எனில் ஓட துவங்கு நின்று மட்டும் விடாதே
உழைப்பு மட்டுமே உடன்பிறப்பு. பயணித்து செல் பயம் தவிர்த்து

வெற்றி  படிகள் : 

* ஆழ்ந்து படியுங்கள்
* புரிந்து தொடர்பு படித்து பயிற்சி பெறுங்கள்
* திட்டமிட்டு படியுங்கள்
* சோம்பல் தவிருங்கள்
* ஆர்வமின்றி காரியமில்லை
* இறுதி வாய்ப்பு என உணர்ந்து படியுங்கள்
* கடின பகுதி என தள்ளி போடாதீர்கள்
* திருப்புதல் அவசியம்
* உதிரும் உழைப்பே

பெற கூடிய வெற்றி கனி
தளர்வரியா மனமும்
எண்ணி துணிந்த உழைப்பும்
வாகை நோக்கி வழி காட்டும் நிலை காட்டிகள்
தொடர்ந்து உழையுங்கள்

# 🐝வாழ்த்துகளுடன் பிரதீப் ப .ஆ . பூங்குளம்🐝

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .