TNPSC TNUSRB TNTET டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் - பிழை திருத்தம் Part III

TNPSC TNUSRB TNTET டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் - பிழை திருத்தம் Part III

1. வேலைக் கொடு - வேலை கொடு

வேலைக் கொடு என்றால் கூரிய ஆயுதமாகிய வேலினைக் கொடு என்ற பொருள் தரும். வேலை கொடு என்றால் உழைப்பதற்கு வேலையைக் கொடு என்ற பொருள் தரும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

2. எத்தனை - எவ்வளவு

இச்சொற்களைப் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். எத்தனை என்பது எண்ணைக் குறிக்கும். எவ்வளவு என்பது அளவைக் குறிக்கும். எத்தனை பாடல் எழுதினாய்? எவ்வளவுதுணி வாங்கினாய் என எழுதுதல் வேண்டும். எவ்வளவு அழகு என்பதே சரி.

3. ஆம் - ஆவது

ஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும். ஆவது என்பதும் எண்ணோடு சோந்து வருவதுண்டு. ஆம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். ஆவது என்பது வரிசை முறையைக் குறிக்கும். சான்று : முதலாம் பாகம், இரண்டாம் பாகம், இரண்டாவது பதிப்பு, ஆறாவது பதிப்பு.

4. கருப்புக் கொடி - கறுப்புக் கொடி

கறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும். நிறத்தையும் உணர்த்தும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். கருப்பு என்னும் சொல்லுக்குப் பஞ்சம் என்பதுதான் பொருளாக அகரமுதலிகளிலும் காணப்படுகிறது. கருப்பு என்பதற்குக் கரும்பு என்ற பொருளும் உண்டு (கருப்பஞ்சோலை). கருப்புக் கொடி, கருப்புச்சாமி, கருப்பண்ணன் என எழுதுவது பிற்கால வழக்காகும். எனினும் காக்கை கருமை நிறமானது என்றும் நீக்ரோகறுப்பு இனத்தவர் என்றும் எழுதுவது நன்று.

5. பெண்ணையார் - பெண்ணையாறு

பெண்ணையார், பாலார், அடையார் என்பன பிழைகளாம். பெண்ணையாறு, பாலாறு, அடையாறு என்பனவே சரியாகும்.

6. முப்பத்தி மூன்று - முப்பத்து மூன்று

முப்பத்தி மூன்று என்பது பிழை. முப்பத்து மூன்று என்பதே சரி. முன்னூறு என்பது பிழை. முந்நூறு என்பதே சரி. ஐநூறு என்பது பிழை. ஐந்நூறு என்பதே சரி. எட்டு நூறு எனல் வேண்டா. எண்ணூறு என்க. பனிரெண்டு என்பது பிழை. பன்னிரண்டு என்பதே சரி.

7. பெரும் ஓசை - பேரோசை

பெரும் ஓசை என்பது பிழை. பேரோசை என்பதே சரி. முப்பெரும் விழா என்பது பிழை. முப்பெருவிழா என்பதே சரி.

8. 5 ம் நாள் - 5 ஆம் நாள்

5 ஆம் நாள் என்பதே சரி. இதுபோலவே 6 ஆவது ஆண்டு என்பதே சரி (6 வது ஆண்டு அல்ல)

9. சிலவு - செலவு

சிலவு என்று பலரும் எழுதுகின்றனர். (செல்லுதல் - செலவு) எனவே செலவு என்று எழுதுக.

10. சுதந்திரம் - சுதந்தரம்

சுதந்திரம் என்று எழுதாதீர். சுதந்தரம் என்றே எழுதுக. சுந்தரராமன், சுந்தரமூர்த்தி என்றே எழுதுக.

No comments:

Post a Comment

Add your valuable comments Here . . .